வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விஜய்யால் பறிபோன பட வாய்ப்புகள்.. ரகசியத்தை உடைத்த விக்ராந்த்

Vikranth Revealed The Secret: விஜய் தற்போது ஆரம்பித்திருக்கும் அரசியல் கட்சி பற்றிய பேச்சு தான் வைரலாகி கொண்டிருக்கிறது. ஒரு சிலர் இதற்கு ஆதரவு தெரிவித்தாலும் பல பேர் அதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் தான் இருக்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க விஜய்யின் சித்தி மகனான விக்ராந்த் பல வருட ரகசியத்தை ஓப்பன் செய்து இருக்கிறார். இவர் நடிக்க வந்து கிட்டத்தட்ட 17 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இவரால் ஒரு முன்னணி அந்தஸ்தை அடைய முடியவில்லை.

அதற்காக போராடிவரும் விக்ராந்த் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு அவருடைய வாழ்க்கையே மாறும் என ரஜினி சொன்னதாக கூட இவர் குறிப்பிட்டு இருந்தார்.

Also read: எம்ஜிஆர் – விஜய் அரசியலில் இருக்கும் வித்தியாசம்.. ஆழம் பார்த்து காலை விட்ட மக்கள் திலகம், அகலக்கால் வைக்கும் தளபதி

அதை தொடர்ந்து மற்றொரு விஷயத்தையும் இவர் கூறியிருக்கிறார். அதாவது இவரிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ஒரு முக்கிய கண்டிஷனை போடுவார்களாம். என்னவென்றால் விக்ராந்த் ஹீரோவாக நடிக்கும் படத்தில் விஜய் ஒரு கேமியா ரோல் செய்ய வேண்டும் அல்லது ஒரு பாடலுக்கு ஆட வேண்டும் என கேட்பார்களாம்.

அதுவும் இல்லை என்றால் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வரவேண்டும் என பல கண்டிஷன்களை கூறுவார்களாம். இதையெல்லாம் கேட்ட விக்ராந்த் கொஞ்சம் கூட யோசிக்காமல் அந்த படமே வேண்டாம் என்று கூறி இருக்கிறார்.

இப்படிப்பட்ட காரணத்தால் அவர் பல பட வாய்ப்புகளை இழந்ததாக ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் உறவு வேறு தொழில் வேறு என்பதை அவர் நிரூபித்துள்ளார். மேலும் விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு தன்னுடைய மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார்.

Also read: ஊழலை பற்றி விஜய் பேசலாமா.? வருமான வரி கதையை அவிழ்த்து விட்ட சர்ச்சை இயக்குனர்

Trending News