ஜீ தமிழில் ஒளிபரப்பாகி மக்களின் வரவேற்ப்பை அதிகம் பெற்று விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி தான் சர்வைவர். 18 போட்டியாளர்களுடன் களமிறங்கிய இந்நிகழ்ச்சியில் இரண்டு குழுக்களாக போட்டியாளர்களை காடர்கள், வேடர்கள் எனப் பிரித்து இரண்டு குழுக்களையும் மோத விட்டனர்.
தற்பொழுது 7 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் காடர்களையும், வேடர்களையும் ஒன்றாக இணைத்து கொம்பர்கள் ஆக்கியுள்ளனர். விக்ராந்த் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இனிவரும் நாட்களில் அனைவரும் தனித்தனியாக தங்கள் திறமைகளை வெளிக்காட்டி போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் தீபாவளிக்காக போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸாக ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் தொகுப்பாளர் ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் தனது கையால் அனைவருக்கும் உணவைப் பரிமாறி அன்பை வெளிப்படுத்தினார்.
பின் விருந்தை முடித்துவிட்டு அனைவரும் அமர்ந்து கலகலவென்று பேசி வந்தனர். அப்பொழுது நடிகர் விக்ராந்த் தன் அண்ணன் விஜய் பற்றி நெகிழ்ச்சியாக அனைவர் முன்பும் மனம் திறந்து பேசினார்.
அதில் தனது அண்ணன் திரையுலக பயணத்தில் சந்தித்த அவமானங்களையும் கஷ்டத்தையும் பகிர்ந்தார். 20 வருடங்களுக்கு முன் ‘இதெல்லாம் ஒரு மூஞ்சியா’என விமர்சித்த பத்திரிக்கைகள் இவரின் பெருமையை தற்பொழுது விமர்சித்து வருவது அவருக்கு கிடைத்த வெற்றி என்று பெருமையுடன் கூறினார்.
மேலும் விஜய் அண்ணா எங்கள் குடும்பத்தின் அடையாளம். ஐ லவ் யு விஜய் அண்ணா என்று உணர்ச்சி பொங்க நிகழ்ச்சியாக பேசி மக்களை மெய்சிலிர்க்க வைத்தார் நடிகர் விக்ராந்த்.