TVK Vijay: தான் எடுத்து வைக்கிற ஒவ்வொரு பாதையிலையும் நிதானம் ரொம்பவே அவசியம் என்று ஒரு கட்டுப்பாட்டுக்குள் விஜய் அவருடைய அரசியல் பயணத்தை பயணித்து வருகிறார். அந்த வகையில் தளபதியின் டார்கெட் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நின்னு வெற்றி பெற வேண்டும் என்பதுதான். ஆனால் அரசியலில் நுழைந்த உடனேயே மக்களிடம் எனக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்க முடியாது.
அதனால் முதலில் அவர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் மீது நம்பிக்கை வர வேண்டும். அதற்காக கொஞ்சம் டைம் வேணும் என்பதற்காகத்தான் இரண்டு வருட காலத்தை விட்டு சட்டமன்ற தேர்தலில் நிற்கப் போகிறார். இந்த இடைப்பட்ட தேர்தலில் மக்களின் பிரச்சினைகளையும், அவர்களின் குறைகளையும் கண்டறிந்து அதை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்யும் பணியில் ஈடுபடும் விதமாக தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் செயல்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் ஏற்கனவே பசி இல்லா திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக அனைத்து மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு உணவளித்தார். அதே மாதிரி வருங்கால இளைஞர்கள் மாணவர்கள் கையில் தான் இருக்கிறது என்று சொல்வதற்கு ஏற்ப மார்க் அடிப்படையில் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பாராட்டுகளையும் ஊக்கத்தொகைகளையும் அள்ளிக் கொடுத்தார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பற்றிய அறிக்கை வெளியிட்ட தளபதி
அதே மாதிரி இந்த ஆண்டும் தொகுதி வாரியாக பிரித்து வருகிற 28ஆம் தேதி மற்றும் அடுத்த மாதம் 3ம் தேதி என இரண்டு நாட்களாக பிரித்து மாணவர்களை சந்தித்து பாராட்ட போகிறார். இதற்கிடையில் தமிழ்நாட்டில் இருக்கும் கல்யாண மண்டப பக்கத்தில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளை நியமித்து அதன் மூலம் மீதம் இருக்கும் உணவுகளை சேகரித்து வறுமையில் வாடுபவர்களுக்கும் முதியோர் இல்லத்திற்கும் கொண்டு சேர்க்கும் பணியை செய்ய தொடங்கி விட்டார்கள்.
இதற்கிடையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இந்நிலையில் சட்டமன்றத் தொகுதி அங்கே தற்போது காலியாக இருப்பதால் வருகிற ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி கடந்த 14ஆம் தேதி விக்கிரவாண்டி தேர்தலுக்கான தாக்கல் தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணிலுள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக மற்றும் தேமுதிக இந்த இடத்தவில்லை புறக்கணித்து விட்டது.
இந்த சூழ்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக அவர்களுடைய நிலைமை என்ன என்று தளபதி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் எங்களுடைய இலக்கு வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தல் மட்டும் தான். அதில் வெற்றி பெற்று மக்களுக்காக பணியாற்றுவது மட்டும்தான். அதற்காக தற்போது ஆயத்த வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம்.
எனவே அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்த தேர்தலிலும் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிடாது என்பதை தெரிவித்திருக்கிறார். குறிப்பாக வருகிற ஜூலை 10 ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் போட்டிடாது. மேலும் எந்த கட்சிகளுக்கும் ஆதரவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகள்
- TVK-யில் சேர இப்பவே போடும் கட்டளை
- TVK திட்டத்தை காலி பண்ண மாணவர்களை குறி வைக்கும் DMK
- 100% ஜெயித்தாலும் தனக்கான எதிரியை உறுதி செய்த TVK விஜய்