செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய தளபதியின் முரட்டு வில்லன்.. உதவிக்கரம் நீட்டிய விஜய், யாஷ்

பிரபல வில்லன் நடிகர் ஒருவர் ஆவடியில் கோயில் கட்டி வருகிறார். படத்தில் தான் மிரட்டும்  வில்லன், ஆனால் நிஜ வாழ்க்கையில் அவ்வளவு ஒரு பொறுப்பான மனிதராம். அவருடைய மொத்த குடும்பத்தையும் இவர்தான்  தோளில் சுமக்கிறார்.

இவர் தமிழில் முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். இதை தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். இவர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை, அசுரன் போன்ற படங்களில் மிரட்டும் வில்லன் ஆக நடித்திருக்கிறார்.

Also Read: குழந்தை நட்சத்திரமாக விஜய் நடித்த 5 படங்கள்.. அப்பவே பட்டைய கிளப்பிய தளபதி

அது மட்டுமல்ல பிகில், பைரவா போன்ற படங்களில் விஜய்க்கு வில்லனாக நடித்தவர் டேனியல் பாலாஜி. இவர் ஆவடியில் ஒரு பிரம்மாண்ட அம்மன் கோவிலை கட்டி வருகிறார். இதை விஜய் மேடையிலே ஒரு முறை வெளிப்படையாக சொன்னார்.

தளபதி விஜய் மற்றும் கேஜிஎப் ஹீரோ யாஷ் உள்ளிட்ட நடிகர்கள், அந்த கோயிலை கட்டுவதற்கு ஒரு பெரும் தொகையை நன்கொடையாக  கொடுத்து உதவிக்கரம் நீட்டி உள்ளனர். டேனியல் பாலாஜி தன்னுடைய அம்மாவின் ஆசைக்காக தனி ஒரு ஆளாக நின்று கோயில் கட்டி சமீபத்தில் கும்பாபிஷேகம் நடத்தினார்.

Also Read: 2024-யை குறி வைத்திருக்கும் தளபதி.. லேடி சூப்பர் ஸ்டார் உடன் விஜய் போட்ட பிளான்

தற்போது இவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சென்னைக்கு அருகே உள்ள ஆவடி பகுதியில் ரக்தூள் அங்காள பரமேஸ்வரி கோயிலை கட்டி பிரம்மாண்டமாக கும்பாபிஷேகமும் நடத்தியுள்ளார்.

இந்த விழாவில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதையெல்லாம் அவருடைய அம்மாவின் ஆசைக்காக செய்தார் என்ற தகவல் வெளியானதும் இவர் மீது தனி மதிப்பு மரியாதையை ஏற்பட்டுள்ளது.

Also Read: டிஆர்பி-ஐ எகிற வைக்க ஏப்ரல் 14-ஐ டார்கெட் செய்யும் டாப் சேனல்கள்.. டிவி-யிலும் அஜித்துடன் மோதிப் பார்க்கும் விஜய்

Trending News