திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஜெயிலர் மிஸ்ஸானாலும் அடுத்து மிஸ் ஆகாது.. விநாயகனை தூக்கி சாப்பிடும் மாஸ் வில்லன்

Jailer Rajini: எங்கு பார்த்தாலும் இப்போது ஜெயிலர் பற்றி தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக ரஜினிக்கு மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் அளவுக்கு படங்கள் வெளியாகாத நிலையில் ஜெயிலர் படம் கம்பேக்காக அமைந்துள்ளது. அதிலும் சூப்பர் ஸ்டார் வேற லெவல் மாஸ் காட்டி இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தோடு லால் சலாம் என்ற படத்தில் ரஜினி நடித்திருந்தார். இந்த படத்தின் பின்னணி வேலைகள் இப்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக ரஜினி இயக்குனர் ஞானவேல் மற்றும் லோகேஷ் கனகராஜ் உடன் அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருக்கிறார்.

Also Read : 2 நாளில் சாதனை படைத்த ஜெயிலர்.. மிரள வைத்த வசூல், மூன்றாவது நாளில் நடக்கப் போகும் சம்பவம்

இதில் முதலாவதாக ஞானவேல் இயக்கத்தில் தான் ரஜினி நடிக்க இருக்கிறாராம். இப்படம் ஆக்ஷன் நிறைந்த திரில்லர் படமாக இருக்கும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த படத்தில் மாஸ் வில்லன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஜெயிலர் படத்திலேயே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

சில காரணங்களினால் அந்த படம் கைநழுவி போக அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைய இருக்கிறார். அதாவது சமீபத்தில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட நடிகர் தான் பகத் பாசில். மாமன்னன் படத்தில் அவருடைய ரத்னவேல் கதாபாத்திரம் ரசிகர்களால் மிகுந்த அளவுக்கு வரவேற்பை பெற்றது.

Also Read : 16 ஆண்டு பகையை நெல்சனை வைத்து தீர்த்துக் கொண்ட சன் டிவி.. பக்காவாக காய் நகர்த்திய கலாநிதி

ஒரு வில்லன் நடிகரை ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாட தொடங்கினார். இப்போது தமிழ் சினிமாவில் எக்கசக்க படங்களில் பகத் பாசிலுக்கு வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. ஜெயிலர் படத்தில் இவர் நடிக்க இருந்த நிலையில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக கடைசி நேரத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது.

ஆனால் ரஜினி, ஞானவேல் இணையும் படத்தில் பகத் பாசில் தான் வில்லனாக நடித்திருக்கிறார். ஜெயிலர் மிஸ் ஆனாலும் அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பை தவற விடக்கூடாது என்பதில் பகத் பாசில் உறுதியாக இருக்கிறார். அதுமட்டுமின்றி ஜெயிலார் படத்தால் கொண்டாடப்படும் விநாயகனை தூக்கி சாப்பிடும் அளவுக்கு மாஸ் வில்லனாக பகத் பாசில் நடிக்க இருக்கிறாராம்.

Also Read : கையெடுத்துக் கும்பிட்டு கெஞ்சி கேட்ட ரஜினி.. சுத்தமாகவே கண்டு  கொள்ளாத பக்தர் செய்த மட்டமான வேலை

Trending News