ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

நேருக்கு நேர் மோத போகும் நடிப்பு அரக்கர்கள்.. விக்ரமுக்கு தீனி போட வரும் வில்லன்

Vikram: பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகாலனாக மிரட்டிய விக்ரம் நடிப்பில் தங்கலான் உருவாகி இருக்கிறது. இப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் கொள்ளை ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அதற்கு முன்பாகவே இவருடைய 62 ஆவது பட அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது.

சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இதன் அறிவிப்பு வீடியோ வெளியாகி பயங்கர வைரலானது. அதில் விக்ரம் எதார்த்தமான ஒரு மனிதராக கிராமத்து கெட்டப்பில் இருந்தார்.

Also read: விக்ரம் கேரியரை தூக்கி நிறுத்திய சூப்பர் ஹிட் படம்.. 21 ஆண்டுகளுக்கு முன் சிங்கம் போல வந்த சியான்

அதிலும் அந்த வீடியோவில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து அவர் அடிதடி செய்யும் காட்சியும் படம் எப்படி இருக்கும் என யோசிக்க வைத்தது. இப்படி ஆர்வத்தை தூண்டி இருந்த அப்படத்தில் எஸ் ஜே சூர்யாவும் இணைந்திருப்பது பேராவலை தூண்டி இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பட குழு வெளியிட்டுள்ளது.

இந்த அப்டேட் தான் தற்போது வைரல் ஆகி வருகிறது. இவர்கள் இருவரும் தனித்தனியாக நடித்தாலே நடிப்பில் இவர்களை மிஞ்ச ஆள் கிடையாது. அப்படி இருக்கும் சூழலில் இரண்டு நடிப்பு அரக்கர்களும் ஒன்றாக படத்தில் இணைந்திருப்பது நிச்சயம் ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் தான்.

அதேபோன்று படத்திற்கு படம் வெரைட்டி காட்டி அசத்தும் விக்ரம் சிறுகாட்சியாக இருந்தாலும் கூட ஸ்கோர் செய்து விடுவார். அப்படிப்பட்டவருக்கு சரியான தீனி போடும் வகையில் எஸ் ஜே சூர்யாவின் கதாபாத்திரம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவர்களின் மாஸ் கூட்டணியை திரையில் காண இப்பொழுது ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read: என்னப்பா சொல்றீங்க! விக்ரம் கூட சசிகுமார் நடித்திருக்காரா!. சித்தப்பா தயவில் சியானுக்கு அடித்த ஜாக்பாட்

Trending News