வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பாக்கியா உன்னால எவ்வளவு தான் நான் அசிங்கப்படுறது.. வில்லி அவதாரம் எடுக்கும் ராதிகா!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்திற்கு பிறகு வீட்டை விட்டு வெளியேறிய கோபி, நேராக ராதிகா வீட்டுக்கு தான் சென்றிருப்பார் என கோபியின் அம்மா ஈஸ்வரி, அங்குசென்று கோபி இருக்கிறாரா என ஒவ்வொரு அறையாக திறந்து பார்க்கிறார்.

வீட்டிற்குள் வந்து இவ்வளவு அநாகரீகமாக நடந்து கொள்ளும் ஈஸ்வரியை, ராதிகாவின் அம்மா ‘அசிங்கமாக நடந்து கொள்ளாதீர்கள்’ எனத் திட்டுகிறார். ‘பாக்யாவின் வாழ்க்கையை கெடுத்து விட்டு ராதிகாவை கோபியுடன் சேர்த்துவைக்கப் பார்க்கிறாயா. நீங்க எல்லாரும் நல்லாவே இருக்க மாட்டீர்கள்’ என ஈஸ்வரி ராதிகாவின் வீட்டிலேயே நின்றுகொண்டு சபிக்கிறார்.

Also Read: ராதிகாவை அசிங்கப்படுத்திய பாக்யாவின் மாமனார்

ஏற்கனவே ஒரு முறை ஈஸ்வரி, ராதிகாவின் வீட்டிற்கு வந்து நடுரோட்டில் நின்று கத்தி அசிங்கப்படுத்தியதைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் வீட்டிற்குள் வந்து சாபம் விடுவதை பார்த்து பொங்கிய ராதிகா, கோபத்தின் உச்சத்துக்கே சென்று ‘ஈஸ்வரியை வீட்டைவிட்டு வெளியே போங்க’ என்று திட்டுகிறார்.

மகனை ஒழுங்காக வளர்க்கத் தெரியாத ஈஸ்வரி, சும்மா இருக்கிற ராதிகாவை சொறிஞ்சு விட்டு தற்போது வில்லியாக மாற்றிவிட்டார். இதன் பிறகு பாக்யா குடும்பத்தால் தொடர்ந்து அசிங்கப்பட்டு கொண்டிருக்கும் ராதிகா, எந்தத் தவறும் செய்யாமல் பழியை ஏற்றுக் கொள்வதற்கு பேசாமல் கோபியை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வரப் போகிறார்.

Also Read: டாப் சீரியலை விரட்டியடித்த சென்டிமெண்ட் சீரியல்

இதற்கு ராதிகாவின் அம்மா மற்றும் அண்ணன் இருவரும் துணையாக இருப்பதால் இந்த முடிவை துணிச்சலாக ராதிகா எடுக்கப் போகிறார். இனி வரும் நாட்களில் பாக்யாவிற்கு வில்லியாக ராதிகா மாறப் போகிறார்.

அடுத்த வாரம் நிச்சயம் ராதிகாவுக்கும் கோபியின் அம்மாவிற்கும் கடும் வாக்குவாதம் நடக்கப்போகிறது. இவ்வாறு ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக செல்லும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது சின்னத்திரையில் ரசிகர்களின் இஷ்டமான சீரியலாக மாறிவிட்டது.

Also Read: காசுக்காக விஜய் டிவி செய்யும் வேலை!

Trending News