வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

வெற்றி படத்தின் இரண்டாம் பாகம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் விமல்.. இந்த படம் வேற லெவல் ஹிட்டாச்சே!

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் விமல் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் நடித்த களவானி, வாகைசூடவா, கலகலப்பு, தேசிங்கு ராஜா, கேடி பில்லா கில்லடி ரங்கா, மஞ்சப்பை போன்ற படங்கள் நல்ல வெற்றி வெற்றி பெற்றதோடு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இவற்றில் சற்குணம் இயக்கத்தில் விமல் நடித்திருந்த வாகை சூடவா படம் அவரது திரைப்பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்தது என்றும் கூறலாம். இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் இப்படம் பெற்றுள்ளது.

அதே போல் 2014ஆம் ஆண்டு வெளியான மஞ்சப்பை படம் வணிக ரீதியில் நல்ல வெற்றியை பெற்றது. விமலுக்கு குடும்ப ரசிகர்களை அதிகம் பெற்றுத்தந்தது. இந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பாக இயக்குனர்கள் சற்குணம், லிங்குசாமி தயாரித்து இருந்தனர்.

manjapai
manjapai

அறிமுக இயக்குனர் ராகவன் இயக்கி இருந்தார். இதில் விமலுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்து இருந்தார். தாத்தா வேடத்தில் ராஜ்கிரண் நடித்து அனைவரது பாராட்டையும் தட்டிச் சென்றார். இப்பொழுது மஞ்சப்பை படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.

முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் ராகவனே இந்த பாகத்தையும் இயக்குகிறார். நடிகர்கள் விமல் – ராஜ்கிரண் மீண்டும் இந்த படத்திற்காக இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் அக்டோபர் மாதம் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்தை மாஸ்டர் பீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சமீபகாலமாக விமல் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே தோல்வியை தழுவின. அவர் பெரிதும் எதிர்பார்த்த களவாணி 2 படமும் வெற்றி பெறவில்லை. எனவே தற்போது மஞ்சப்பை 2 படத்தை கையில் எடுத்துள்ளார். இது வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News