செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

தடம் பட ஹீரோயினை தட்டி தூக்கிய விமல்.. எகிறும் எதிர்பார்ப்புகள்!

தடம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தன்யா ஹோப். இந்தப் படம் ஓரளவிற்கு வெற்றி பெற்று ரசிகர்களுக்கு தெரியக்கூடிய நடிகையாக பிரபலமானார்.

அதன்பிறகு ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு என்ற படத்தின் வெற்றி மூலம் ரசிகர்கள் கொண்டாடக்கூடிய நடிகையாக உருவானார்.

பாக்கு வெத்தல மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சு எனும் பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகி ஹரிஷ் கல்யாண் மட்டும் தன்யா ஹோப்விற்கு திரைத்துறையில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

தாராள பிரபு படத்திற்கு பிறகு தன்யா ஹோப் எந்த படத்தில் நடிக்கப்போகிறார் என ரசிகர்கள் அனைவரும் ஆவலாக இருந்தனர். தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.

அதாவது களவாணி புகழ் விமலுடன் தன்யா ஹோப் ஜோடியாக நடிக்க உள்ளார். இப்படத்தை பில்லா பாண்டி படத்தை இயக்கிய குட்டி புலி சரவணன் சக்தி இயக்குகிறார். எம் ஐ கே ப்ரொடக்ஷன் இப்படத்தை தயாரிக்கிறது.

vimal tanya hope
vimal tanya hope

நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாகவும் விரைவில் மதுரை மற்றும் சென்னையில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெற்றியின் மூலம் விரைவில் அடுத்தடுத்த படங்களில் ஜோடி சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News