திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒரு தேவை இருக்கு.. கருணாஸ் உடன் மிரட்டும் விமலின் போகுமிடம் வெகு தூரமில்லை ட்ரெய்லர்

Vimal: ஒரு காலத்தில் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்த விமல் தற்போது ஒரு வெற்றிக்கு போராடிக் கொண்டிருக்கிறார். ரசிகர்களும் இந்த எதார்த்தமான நடிகரை ரொம்பவும் மிஸ் செய்கிறார்கள்.

இதற்கெல்லாம் சேர்த்து வைத்து தற்போது அவர் போகுமிடம் வெகு தூரமில்லை என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.

மைக்கேல் கே ராஜா இயக்கத்தில் விமலுடன் இணைந்து கருணாஸ், வேலராமமூர்த்தி, தீபா ஷங்கர் என பலர் நடித்துள்ளனர். ட்ரெய்லரின் ஆரம்பமே இந்த உலகத்தில் ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒவ்வொரு தேவை இருக்கிறது என்ற வசனத்துடன் தொடங்குகிறது.

விமலின் அடுத்த படம்

அமரர் ஊர்தி ஓட்டுனராக இருக்கும் விமலுக்கு கருணாஸால் சில பிரச்சனைகள் வருகிறது. இதில் கருணாஸ் பெண் தன்மை கலந்த தோற்றத்தில் இருக்கிறார்.

நாடக கலைஞராக இருக்கும் இவர் தான் வில்லன் என பார்க்கும் போதே தெரிகிறது. இவரால் விமலுக்கு ஏற்படும் பிரச்சனை ஊர் பிரச்சனையாகவும் மாறுகிறது.

அதில் அவர் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கும் காட்சிகள் ட்ரெய்லரில் காட்டப்பட்டுள்ளது. அதேபோல் சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பது போன்ற சண்டை காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

இப்படியாக வெளிவந்துள்ள ட்ரெய்லர் கவனம் ஈர்த்துள்ள நிலையில் இது விமலிற்கு நல்ல ஒரு கம்பேக்காக இருக்கும் என்றும் தெரிகிறது.

சமீபத்தில் வெளியான டிரெய்லர்கள்

Trending News