Sir Trailer: விமல் நடிக்க வந்த புதிதில் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்தார். ஆனால் இடையில் கொஞ்சம் தோல்விகளை சந்தித்த அவர் இப்போது மீண்டும் முழு வேகத்தில் இறங்கியுள்ளார்.
அதன்படி தற்போது தேசிங்கு ராஜா 2, போகுமிடம் வெகு தூரம் இல்லை இன்னும் சில படங்கள் அவர் கைவசம் இருக்கிறது. இந்த சூழலில் அவர் நடித்து முடித்துள்ள சார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.
போஸ் வெங்கட் இயக்கத்தில் விமலுடன் இணைந்து சாயாதேவி கண்ணன், சிராஜ், சரவணன், ரமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே போஸ் வெங்கட் கன்னிமாடம் படத்தை இயக்கியிருந்தார்.
அதைத்தொடர்ந்து தற்போது வெளிவர காத்திருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்கிறது என்பதை காண்போம். இதன் ஆரம்பத்திலேயே சாமி வேட்டைக்கு போகும் காட்சி காட்டப்படுகிறது.
ரொம்பவும் ஆக்ரோசத்துடன் ஆரம்பிக்கும் அந்த ட்ரெய்லரில் விமல் பள்ளி வாத்தியாராக வருகிறார். ஏற்கனவே இவர் வாகை சூடவா படத்தில் இப்படி ஒரு கேரக்டரில் நடித்து பாராட்டுகளை அள்ளியிருந்தார்.
போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல்
80 காலகட்டத்தில் நகரும் கதையான இதில் பள்ளிக்கூடம் இருக்கக் கூடாது என ஊரின் முக்கிய புள்ளி நினைக்கிறார். அதற்காக நடக்கும் போராட்டத்தில் ஊர் மக்களும் அதையே தான் சொல்கின்றனர்.
ஆனால் அதையெல்லாம் தாண்டி விமல் பள்ளிக்கூடத்தை காப்பாற்ற ரிஸ்க் எடுக்கிறார். ட்ரெய்லரின் இறுதியில் சாமியை கொன்னுட்டேன் என அவர் கையில் அருவாளோடு உக்கிரமாக இருப்பது போல் ட்ரெய்லர் முடிகிறது.
இதில் கதையை பொருத்தவரையில் பெரிய ட்விஸ்ட் ஒன்றும் இல்லை. அதே போல் ஹீரோ கதாபாத்திரமும் காந்தாரா, கருடன் படத்தில் வருவது போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இது எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்று தெரியவில்லை.
ஏனென்றால் இப்போது படம் எடுக்கும் இயக்குனர்கள் வெட்டு குத்து இருந்தால் தான் மக்கள் ரசிப்பார்கள என்ற மனநிலையில் இருக்கின்றனர். அப்படித்தான் இந்த சார் படத்தையும் டிரைலரும் இருக்கிறது. ஆனால் இது விமலுக்கு வாகை சூடவா போன்று வெற்றி வாகை சூடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
காந்தாரப் போல் ஆக்ரோஷமாக வெளிவந்த விமலின் சார் ட்ரெய்லர்
- அச்சுறுத்தும் அனுராக், மகளை பறிகொடுத்த விஜய் சேதுபதி
- கல்கி படத்தின் பிரம்மாண்டமான ட்ரெய்லர்
- பொண்ணும் இல்ல பொண்டாட்டியும் இல்ல, அப்ப லட்சுமி யாரு.?