திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தலையை சுற்ற வைக்கும் ஜெயிலர் வர்மனின் சம்பளம்.. ஒரே படத்தால் எகிறிய மார்க்கெட்

Jailer Vinayakan: ஜெயிலர் படத்தின் அலை தான் இப்போது அடித்து கொண்டிருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் வெளியாகி 12 நாட்களான பிறகும் இப்போதும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்படி ஒரு வெற்றியை ஜெயிலர் கொடுக்கும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு பிரபலங்களின் மார்க்கெட்டும் இப்போது உயர்ந்து இருக்கிறது. அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே 100 கோடிக்கு கீழ் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நிலையில் அடுத்ததாக 130 கோடி ஒரு படத்திற்கு வாங்க இருக்கிறாராம். அதேபோல் நடிகர் வசந்த் ரவிக்கும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

Also Read : ஜெயிலர்ல ரஜினிக்கு 80 கோடி சம்பளம் எல்லாம் பொய் கணக்கு.. எம்மாடியோ லாபத்துல ஷேர் மட்டும் இத்தனை மடங்கா!

மேலும் ஜெயிலர் படத்தில் முக்கியமாக பார்க்கப்பட்ட வில்லன் தான் வர்மன். காமெடி கலந்த அவரது வில்லத்தனத்தை திரையில் பார்க்க விசில் சத்தம் பறந்தது. அவ்வாறு கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் மலையாள நடிகர் விநாயகன். இவர் தமிழில் திமிரு, மரியான், சிலம்பாட்டம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனாலும் இந்த படங்களில் கவனம் பெறாத விநாயகன் ஜெயிலர் படத்தால் உச்சாணி கொம்பிற்கு சென்றுள்ளார். அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க 35 லட்சம் சம்பளமாக பெற்றிருக்கிறார்.

Also Read : காதில் விழுந்ததை தவறாக சித்தரித்தாலும் வசூலில் வெளுத்து வாங்கும் ஜெயிலர்.. தனிக்காட்டு ராஜாவாக ஜெயித்து காட்டிய ரஜினி

அவருடைய நடிப்புக்கு இது குறைவு தான் என்றாலும் ஜெயிலரால் அடித்த லாக் அடுத்தடுத்த படங்களில் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருக்கிறார். லட்சங்கள் தனக்கு பத்தாது கோடி தான் வேண்டும் என கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டு இருக்கிறாராம். தயாரிப்பாளர்களும் இவர் கேட்ட பணத்தை கொட்டிக் கொடுக்க தயாராக உள்ளனர்.

ஆகையால் விநாயகனை தொடர்ந்து இனி தமிழ் படங்களில் பார்க்கலாம். மேலும் டாப் ஹீரோக்களுக்கு வில்லனாக பாலிவுட்டில் இருந்து நடிகர்களை இறக்கி வந்த நிலையில் நெல்சன் மலையாள நடிகரை கொண்டு வந்து சம்பவம் செய்துவிட்டார். அதனால் தற்போது விநாயகனின் மவுசும் ஒட்டு மொத்த சினிமாவில் உயர்ந்து இருக்கிறது.

Also Read : அஜித்துடன் கூட்டணி சேரும் தனுஷ்.. லியோ, ஜெயிலர் வசூலை முறியடிக்க போகும் பிரம்மாண்ட கூட்டணி

Trending News