வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விண்ணைத்தாண்டி வருவாயா சிம்புவுக்கான கதை இல்லை.. கௌதம் மேனனை ஒதுக்கிய 2 டாப் ஹீரோக்கள்

சிம்புவின் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர்களின் கூட்டணியில் இதற்கு முன்பே விண்ணை தண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்கள் வெளிவந்திருக்கிறது. அதில் விண்ணைத்தாண்டி வருவாயா மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் சிம்பு மற்றும் திரிஷா இருவரின் கெமிஸ்ட்ரியும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆனது. சொல்லப்போனால் இன்று வரை கார்த்திக், ஜெசி என்ற அந்த கதாபாத்திரங்கள் ரசிகர்களின் நினைவை விட்டு நீங்காமல் இருக்கிறது.

Also read : மொத்தமாய் கழுவி ஊத்தின 5 ரீமேக் படங்கள்.. ஓவர் அலப்பறையில் அடிவாங்கிய சிம்புவின் ஒஸ்தி

அந்த அளவுக்கு விண்ணைத்தாண்டி வருவாயா அவர்கள் இருவருக்கும் ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது. ஆனால் உண்மையில் கௌதம் மேனன் இந்த திரைப்படத்தின் கதையை எழுதும்போது சிம்புவை நினைத்து எழுதவில்லையாம். பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை மனதில் வைத்து தான் அவர் இந்த கதையை எழுதி இருக்கிறார்.

அவரை வைத்தே இந்த படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அவர் நினைத்திருக்கிறார். ஆனால் மகேஷ் பாபு படம் முழுவதும் ஒரே காதல் காட்சியாக இருக்கிறது. அதனால் கதையின் இடை இடையே மாஸ் காட்சிகள் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

Also read : விண்ணைத்தாண்டி வருவாயா ரேஞ்சுக்கு அரங்கேறிய ராஜா ராணி 2 திருமணம்.. சிம்புவை ஓவர் டேக் செய்த ஆதி

ஆனால் கௌதம் மேனன் இந்த கதையை ரொம்பவும் ரசித்து எழுதி இருக்கிறார். அதனால் காட்சிகளை மாற்ற அவர் விரும்பவில்லை. அதன் பிறகு அவர் இந்த கதையை அல்லு அர்ஜுனிடம் கூறியிருக்கிறார். அவருக்கும் இந்த கதை பிடித்திருக்கிறது. ஆனால் மாஸான சண்டைக் காட்சிகள் போன்றவை வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

இதனால் நொந்து போன கௌதம் மேனன் அதற்குப் பிறகு சிம்புவை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார். படமும் அவர் நினைத்தது போலவே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு இதே படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் இந்த படத்தில் ஹீரோ, ஹீரோயின் இருவரும் ஒன்று சேர மாட்டார்கள்.

ஆனால் தெலுங்கில் இப்படி இருந்தால் நன்றாக இருக்காது என புரொடியூசர் கூறியிருக்கிறார். அதன்படியே தெலுங்கில் ஹீரோ ஹீரோயின் இருவரும் ஒன்று சேர்வது போல் காட்டப்பட்டிருக்கும். அந்த வகையில் இப்படம் இரு மொழிகளிலும் கிளைமாக்ஸ் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது.

Also read : சிம்புவுடன் கூட்டணி போடும் தனுஷ்.. டைரக்டர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

Trending News