வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

3 வருடத்துக்கு மேல ஓடின திரிஷா படம்.. எது தெரியுமா.. சின்ன தலைவி For a reason

அன்பிற்கும் உண்டோர் அடைக்கும்தாழ் என்ற ஒற்றை வரியில், விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்கள் பலர் ப்லேலிஸ்ட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த படம் சிம்பு கேரியரில் ஒரு முக்கிய படம். இன்றளவும் இந்த படத்தின் பார்ட் 2-வை ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா, சிம்பு ஹீரோவாக நடித்த இந்த படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடித்திருப்பார். மேலும் சிறப்பு தோற்றத்தில் நாக சைதன்யா, சமந்தா இருவரும் அவர், அவர் பங்குக்கு அழகாக நடித்திருப்பார்கள்.

அதுவும் திரிஷா screen presence அவ்வளவு அழகாக இருக்கும். சிம்பு காதல் பல இளைஞர்களின் புண்ணுக்கு மருந்தாக இருக்கும். மேலும், பல பெண்களின் மூட் ஸ்விங்க்ஸை படத்தில் GVM விட யாரும் தெளிவாக காட்டி இருக்க முடியாது.

3 வருடம் ஓடிய படம்

சிம்புவின் திரைவாழ்க்கையில் மறக்கமுடியாத படங்களில் ஒன்றான விண்ணை தாண்டி வருவாயா மிகப்பெரிய சாதனை என்று தான் கூறியாக வேண்டும். வருடா வருடம் இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பல திரையரங்கங்களில் ரீரிலீஸ் செய்யப்படும். அவ்வாறு ரீரிலீஸ் செய்யப்பட்ட விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் சென்னையில் இருக்கும் PVR திரையரங்கில் ஆயிரம் நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

பிரேக்கப் ஆகும்போது, காதலி கூட சண்டைபோட்டு விட்டு, அழுதுவிட்டு எல்லாம் பல இளைஞர்கள் இங்கு வந்து படம் பார்த்துள்ளார்கள். அப்படி பார்க்கும்போது, தன்னை போலவே திரையில் சிம்பு சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் கஷ்டப்படுவதை பார்த்து ஆறுதல் அடைந்து கொள்வார்கள்.

Trending News