திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

வசூல் வேட்டையாடிய வினோத்-அஜித் கூட்டணி.. 3 படங்களின் மொத்த வசூல்

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் போன்ற திரைப்படங்களின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த வினோத் மூன்றாவது படத்திலேயே அஜித்துடன் இணைந்தார். போனி கபூர் இயக்கத்தில் நேர் கொண்ட பார்வை திரைப்படத்தின் மூலம் இணைந்த இவர்களின் கூட்டணி அடுத்தடுத்த திரைப்படங்களிலும் வெற்றி வாகை சூடியது.

நேர் கொண்ட பார்வை திரைப்படம் ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பிங்க் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். ஹிந்தியைப் போல தமிழிலும் இப்படம் நல்ல வசூலை பெற்றது. அந்த வகையில் உலக அளவில் இப்படம் 215 கோடி ரூபாய் வசூலித்து மாஸ் காட்டியது. அதை தொடர்ந்து இந்த கூட்டணி வலிமை திரைப்படத்தில் இணைந்தது.

Also read: அஜித் கூடவே வைத்திருக்கும் 5 நடிகர்கள்.. வில்லனாக மீண்டும் மிரட்ட வரும் அருண் விஜய்

ஆக்சன் திரில்லர் கலந்து எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் பல வருடங்கள் ரிலீஸ் ஆகாமல் இழுத்தடித்து வந்தது. இதற்கு முக்கிய காரணம் கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட ஊரடங்கு தான். இந்த தடைகளை எல்லாம் கடந்து வலிமை திரைப்படம் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ஒரு வழியாக ரிலீஸ் ஆனது.

அஜித் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ஏங்க வைத்த இந்த திரைப்படம் வசூலிலும் சோடை போகவில்லை. அந்த வகையில் உலக அளவில் வலிமை திரைப்படம் 250 கோடி வரை வசூலித்தது. அதைத்தொடர்ந்து மூன்றாம் முறையாக வினோத், அஜித் கூட்டணி துணிவு திரைப்படத்தின் மூலம் கைகோர்த்தனர்.

Also read: கேரவன்க்குள்ளே விஜய் நண்பர்களை வச்சு செஞ்ச அஜித்.. பேட்டியில் உண்மையை உடைத்த சஞ்சீவ்

மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான அந்த திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியானது. இப்படத்துடன் விஜய்யின் வாரிசு படமும் நேரடியாக மோதியதால் உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் துணிவு திரைப்படம் ஒட்டு மொத்த ரசிகர்களும் கொண்டாடப்படும் வகையில் அதில் புதிரி ஹிட் அடித்தது.

அந்த வகையில் துணிவு இப்போது வரை 350 கோடி வசூலித்திருக்கிறது. மேலும் தியேட்டரில் மட்டுமல்லாமல் ஓடிடி தளத்தில் கூட துணிவு திரைப்படத்திற்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில் இந்த மூன்று படங்களும் உலக அளவில் 815 கோடி வரை வசூலித்து பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட்டுள்ளது. இதுவே அஜித்தின் அடுத்த படத்திற்கான உச்சகட்ட எதிர்பார்ப்பையும் தூண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: ஐம்பதை தாண்டியும் இந்திய அளவில் சாதனை படைக்கும் விஜய், அஜித்.. முதல் முறையாக ஒன்றாக கொண்டாடும் ஃபேன்ஸ்

Trending News