வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வாரிசு! துணிவு! முதலில் எந்த படம் போவீங்க? ரசிகர்களிடம் சிக்காத மாதிரி ஒரு பதில் சொன்ன H.வினோத்

இயக்குனர் வினோத் தற்போது அஜித்தின் துணிவு படத்தை இயக்கியுள்ளார். வினோத்தின் திறமையை பார்த்து அஜித் பூரித்து அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு கொடுத்து வந்தார். ஆகையால் மூன்று முறை இவர்களது கூட்டணி அமைந்துள்ளது. இந்நிலையை வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு துணிவு படம் வெளியாக உள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள துணிவு படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆகையால் இந்த படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. துணிவு படத்தின் முதல் பாடல் மற்றும் இரண்டாம் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Also Read : பட்டையை கிளப்பிய துணிவு செகண்ட் சிங்கிள்.. எப்படி இருக்கிறது காசேதான் கடவுளடா பாடல் வீடியோ ?

இந்நிலையில் அஜித்தின் துணிவு படத்திற்கு போட்டியாக விஜயின் வாரிசு படம் வெளியாக உள்ளது. இதனால் இணையத்தில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஆனால் தற்போது வினோத் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது தனது சொந்த படமான துணிவு படத்தை பார்ப்பதைவிட வாரிசு படத்தை பார்க்க தான் ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். அதாவது ஒரு இயக்குனராக துணிவு படத்தை பலமுறை பார்த்து விட்டேன். ஆனால் ரசிகர்களுடன் தியேட்டரில் விஜய்யின் வாரிசு படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக வினோத் கூறியுள்ளார்.

Also Read : மோசமான கெட்டவனாக துணிவில் அஜித்தை பார்க்கலாம்.. வினோத் அப்டேட்டால் ஆடிப் போன கோலிவுட்

தனது படத்தை பிரமோஷன் செய்வதை காட்டிலும் இப்போது வாரிசு படத்தை வினோத் ப்ரோமோஷன் செய்து வருகிறார். துணிவு படத்துக்கு வாரிசு படம் தான் போட்டி என்பது தெரிந்தே வினோத் இவ்வாறு சொல்லி உள்ளார். இதை அறிந்த அஜித் ரசிகர்கள் பக்கத்து கடைக்கு டீ ஆத்துவதை விட்டுவிட்டு சொந்த கடையை பார்க்குமாறு கிண்டல் அடித்து வருகிறார்கள்.

வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு விஜய் தான் தமிழ்நாட்டில் நம்பர் ஒன் நடிகர், அவருக்குத்தான் அதிக திரையரங்குகள் கொடுக்க வேண்டும் என்ற உதயநிதியிடம் முறையிட போவதாக சொல்லி வருகிறார். இப்படி துணிவு படத்திற்கு வாரிசு படக்குழு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் வினோத் வாரிசு படத்தை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Also Read : ரிலீசுக்கு முன்பே ஓரம் கட்டப்பட்ட துணிவு.. தில்ராஜு கொடுத்த தில்லானா பேட்டி

Trending News