தமிழ் சினிமாவில் நந்தா படத்தின் மூலம் அறிமுகமானவர் வினோத் கிஷன். அதன்பிறகு இவர் சமஸ்தானம், கிரீடம், நான் மகான் அல்ல மற்றும் அந்தகாரம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல படத்தின் மூலம் ரசிகர்களிடம் ஓரளவிற்கு பிரபலமானார். அதிலும் இப்படத்தில் இவருடைய நடிப்பு பெரும் வரவேற்பு பெற்றது. அதன்பிறகு இவர் தமிழ் சினிமாவில் அதிகப்படியான படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இருப்பினும் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு எந்த ஒரு கதாபாத்திரமும் அமையாததால் தற்போதுவரை கிடைக்கும் கதாபாத்திரங்களை ஏற்று தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். சினிமாவை பொறுத்தவரை வெற்றி எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் வெற்றி என்பது கண்டிப்பாக ஒரு நாள் வரும்.
சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் பலரும் பல வருடங்களுக்கு பிறகுதான் வெற்றி பெற்றுள்ளனர் அந்த மாதிரி தற்போதுவரை வெற்றிக்காக போராடி கொண்டிருக்கும் கிருஷ்ணன் ஒரு நாள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இவர் உடற்பயிற்சி செய்தி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதில் மற்ற நடிகர்கள் வைத்து இருப்பது போலவே உடல் கட்டமைப்பை வைத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஒரு சில ரசிகர்கள் சிக்ஸ்பேக் சூர்யா போலவே வினோத் கிஷன் இருப்பதாக கூறி வருகின்றனர்.
சினிமாவில் வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கும் வினோத் கிஷன் அவர்களுக்கு சினிமா பேட்டை சார்பாக வாழ்த்துக்கள்.