புதன்கிழமை, ஜனவரி 22, 2025

சறுக்கிய நேரத்தில் கை கொடுத்த கமல்.. ஆண்டவரை இம்ப்ரஸ் செய்த வினோத், KH 233 உருவான சீக்ரெட்

Kamal-H.Vinoth:இதோ அதோ என்று ஆவலுடன் எதிர்பார்த்து வந்த கமல், வினோத் கூட்டணி ஒரு வழியாக தங்கள் அறிவிப்பை வெளியிட்டு விட்டார்கள். இதற்காகவே காத்திருந்த ரசிகர்கள் படம் எப்படி இருக்கும் என்பதையும் இப்போது சிந்திக்க தொடங்கி விட்டனர். ஆனால் இந்த கூட்டணி அமைந்ததே ஒரு சுவாரஸ்யம் தான்.

அதாவது வலிமை படம் வெளிவருவதற்கு முன்பும் சரி வெளிவந்த பின்பும் சரி எந்த மாதிரியான விமர்சனங்களை சந்தித்தது என்பதை அனைவருக்கும் தெரியும். அப்போதே கமல் வினோத்தை கூப்பிட்டு நாம் இணைந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று சொல்லி அட்வான்ஸ் தொகையையும் கொடுத்தாராம்.

Also read: சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் கமல் பட நடிகர்.. ஆண்டவரால் கம்பேக் கொடுக்கும் பாலிவுட் ஹீரோ

அதன் பிறகு அவர் விக்ரம் படத்தில் பிசியாகி விட, வினோத் துணிவு படத்தில் பிஸியாகிவிட்டார். அதை தொடர்ந்து இரண்டு படங்களும் வெளியாகி தாறுமாறு ஹிட் அடித்தது. அதிலும் துணிவு வினோத்திற்கான மிகப்பெரிய அடையாளமாக மாறி இருக்கிறது.

அதைத்தொடர்ந்து பெரிய, பெரிய நிறுவனங்களில் இருந்தெல்லாம் அவரை படம் பண்ண சொல்லி அணுகி இருக்கிறார்கள். ஆனால் சறுக்கிய நேரத்தில் கை கொடுத்தவருக்கு தான் முக்கியத்துவம் என்று அவர் கமலுக்கான கதையை பார்த்து பார்த்து செதுக்கினாராம். இருப்பினும் இந்த கூட்டணி இணைய பல மாதங்கள் ஆகிவிட்டது.

Also read: பெயரே தெரியாமல் அழகில் மயக்கும் 5 ஆன்ட்டிகள்.. கமல் செய்த சூழ்ச்சியை சுக்கு நூறாக்கிய ஆஷா சரத்

ஆனாலும் அமைதியாக காத்திருந்த வினோத் ஆண்டவரை ரொம்பவே இம்ப்ரஸ் செய்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் அவர் கூறிய கதையை விட இவருடைய இந்த பக்குவம் தான் உலக நாயகனை கவர்ந்திருக்கிறது. இப்படி ஒரு மனுஷனா என்று சிலிர்த்துப் போன கமல் தற்போது ஆரவாரமாக தங்கள் கூட்டணியின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஒரு முக்கிய பிரச்சனையை பற்றி சொல்லப் போகும் இப்படத்திற்கு வினோத் மற்றும் கமல் இருவரும் சேர்ந்து கதை எழுதி இருக்கிறார்கள். இதுவே சுவாரசியத்தை கூட்டி இருக்கும் நிலையில் இந்த KH 233 கூட்டணி உருவானதற்கு பின்னணியில் இப்படி ஒரு சுவாரஸ்யமான சீக்ரெட் இருப்பது பலருக்கும் புதிய தகவலாக இருக்கிறது.

Also read: நாசுக்காக ஒதுங்கிய கமல், ரஜினி.. சிவகார்த்திகேயனை மீண்டும் தூக்கி விட தனுஷ் காட்டிய விசுவாசம்

Trending News