செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

துணிவு படத்திற்கு வினோத் முதலில் தேர்வு செய்த ஹீரோ.. மனைவியால் அஜித்துக்கு அடிச்ச அதிர்ஷ்டம்

எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இப்போது உருவாகி இருக்கும் படம் துணிவு. இந்த படத்தில் அஜித், மஞ்சு வாரியர் மற்றும் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர். துணிவு படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசுக்கு வெளியாக உள்ள நிலையில் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வினோத், அஜித் கூட்டணியில் ஏற்கனவே நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த படங்களுக்கு முன்பே முதலில் துணிவு படத்தின் கதையை அஜித்துக்கு வினோத் சொல்லி உள்ளார். அப்போது தயாரிப்பாளர் போனி கபூர் துணிவு படத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம் இப்போது நேர்கொண்ட பார்வை படத்தை எடுக்க கூறியுள்ளார்.

Also Read : போட்டி போட்டு மில்லியன் கணக்கில் ரசிகர்களை கூட்டும் வாரிசு, துணிவு.. கத இல்லனா வெளியில தலை காட்ட முடியாது

ஆனால் வினோத் முதலில் அஜித்திடம் துணிவு படத்தை கூறவில்லையாம். இதற்கு முன்னதாக சூர்யாவை தான் முதலில் சந்தித்துள்ளார். அவரிடம் துணிவு படத்தின் கதையை கூறியிருக்கிறார். அப்போது அந்தக் கதை சூர்யாவுக்கு மிகவும் பிடித்து போய் உள்ளது. ஆனால் வினோத் அந்த அளவுக்கு அப்போது பரிச்சயம் இல்லை.

ஆகையால் வினோத்தை சூர்யா மறுத்துவிட்டாராம். சூர்யாவின் தம்பி கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை வினோத் இயக்கியிருந்தார். இந்த படத்தைப் பார்த்து ஷாலினி வியந்துள்ளார். உடனே தனது கணவர் அஜித்தை வினோத்துடன் ஒரு படம் பண்ணுமாறு கூறியுள்ளார்.

Also Read : கொல மாஸான ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட துணிவு படக்குழு.. கெத்து காட்ட தயாரான அஜித்

அப்போது தான் துணிவு படத்தை அஜித்திடம் வினோத் கூறியிருந்தார். மேலும் துணிவு படம் வேற லெவலில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் டிரைலரை பார்த்து வியந்து போன சூர்யா துணிவு படத்தை தவற விட்டு விட்டோமே என்று தற்போது வருந்துகிறாராம். ஏனென்றால் அஜித்தை காட்டிலும் விஜயின் படங்கள் வசூல் சற்று அதிகமாக இருக்கும்.

ஆனால் இப்போது விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் ஜனவரி 11 ஆம் தேதி ஒரே நாளில் வெளியாகிறது. இப்போது வாரிசு படத்தை விட துணிவு படத்திற்கு தான் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. காரணம் படத்தின் டிரைலரை வைத்து பார்க்கும் போது துணிவுக்கு தான் அதிக வெற்றி உள்ளதாக விமர்சனங்கள் வருகிறது.

Also Read : வாரிசை விட எதிர்பார்ப்பை அதிகரித்த துணிவு சஸ்பென்ஸ்.. ட்ரெய்லரால் ரிலாக்ஸான அஜித்

Trending News