வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

வினோத் இடத்தை பிடித்த மகிழ்திருமேனி.. அஜித் கொடுத்த சர்ப்ரைஸ்

விக்னேஷ் சிவன் விலகியதை அடுத்து ஏகே 62 படத்தை மகிழ்த்திருமேனி இயக்குவது உறுதியாகியுள்ளது. லைக்கா ப்ரொடக்ஷன் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறது. இந்நிலையில் அருண் விஜய்க்கு டைனிங் பாயிண்டாக அமைந்த தடம் படத்தை மகிழ்திருமேனி தான் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் ஏகே 62 படத்திற்காக மகிழ்திருமேனி இரண்டு கதைகளை தயார் செய்து வைத்திருந்தாராம். அஜித்தை சந்தித்து இந்த கதைகளை மகிழ் கூறியுள்ளார். அதில் ஒன்று ஃபேமிலி கலந்த ஆக்சன் சப்ஜெக்ட்டாக இருந்துள்ளது. மற்றொன்று திரில்லர் கலந்த ஆக்சன் கதையை கூறியுள்ளார்.

Also Read : ஓவர் பர்ஃபெக்ஷன் பார்க்கும் அஜித்.. ஏகேவை ஓரம்கட்டி விட்டு பிரபல நடிகரை லாக் செய்த லைக்கா

இந்த இரண்டு கதைகளுமே அஜித்துக்கு ரொம்ப பிடித்து விட்டதாம். இதனால் விரைவில் ஏகே 62 படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. அதுமட்டுமின்றி அஜித் மகிழ்திருமேனிக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதாவது இந்த இரண்டு கதைகளுமே அஜித் நடிப்பதாக உறுதியளித்து உள்ளாராம்.

ஏனென்றால் அஜித் பொதுவாக ஒரு இயக்குனருடன் பணியாற்றினால் அடுத்த இரண்டு மூன்று படங்களும் அதே இயக்குனருடன் தான் கூட்டணி போடுவார். அப்படிதான் சிறுத்தை சிவா, வினோத் ஆகியோர் அஜித் லிஸ்டில் உள்ளனர். இப்போது அதில் மகிழ்திருமேனியும் இணைந்துள்ளார். அதாவது ஏகே 62 மற்றும் 63 படங்கள் மகிழ்திருமேனி தான் இயக்க உள்ளார்.

Also Read : அஜித்தால் மட்டுமே இழுத்தடிக்கும் AK-62.. லியோவுக்கு போட்டினா சும்மா விட்ருவோமா!

அதாவது இரண்டு கதையுமே கூறி அஜித்தை மகிழ்திருமேனி இம்ப்ரஸ் செய்துள்ளார். அந்தக் கதையை வேறு ஒருவருக்கு விட்டுக் கொடுக்க அஜித் மனம் இல்லாததால் தானே நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டு உள்ளாராம். மேலும் இந்த இரண்டு படங்களுமே லைக்கா தான் தயாரிக்க உள்ளது.

ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிய நிலையில் ஏகே 63 படத்தை இவர் இயக்குவார் என்று ஒரு பேச்சு போய்க் கொண்டிருந்தது. இப்போது மகிழ்திருமேனிக்கு தான் அடுத்த இடமும் கிடைத்துள்ளது. அஜித் மனதில் வினோத் எப்படி ஒரு நல்ல பெயருடன் இருக்கிறாரோ அந்த இடத்தை தற்போது மகிழ்திருமேனி பிடித்துள்ளார்.

Also Read : ஹாலிவுட் படங்களை ஓரங்கட்டிய அஜித்.. உலகளவில் ஒரே வாரத்தில் துணிவு செய்த சாதனை

Trending News