செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஜெட் வேகத்தில் எகிறிய வினோத்தின் மார்க்கெட்.. அஜித்தால் அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கும் 4 படங்கள்

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற திரைப்படங்கள் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த வினோத் தற்போது அஜித்தின் கூட்டணியில் மூன்றாவது வெற்றிக்கு தயாராகி இருக்கிறார். தற்போது இந்த கூட்டணியில் உருவாகி இருக்கும் துணிவு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் முதல் பாடல் பரபரப்பை கிளப்பிய நிலையில் இப்படத்திற்கான ஆர்வமும் இப்போது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வினோத் தற்போது கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அதாவது இவருடைய இயக்கத்தில் நடிப்பதற்கு பல முன்னணி நடிகர்களும் போட்டி போட்டு வருகிறார்கள். அந்த வகையில் இவர் தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் பிஸியாகி வருகிறார். அதில் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக உலக நாயகனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

Also read: துணிவு படத்தில் பட்டையை கிளப்பிய மஞ்சு வாரியர்.. செல்லப் பெயர் வைத்த அஜித்

தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் கமல் அடுத்ததாக மணிரத்தினத்துடன் கூட்டணி அமைக்க இருக்கிறார். இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் அடுத்ததாக வினோத்துடன் இணைய இருக்கிறார். இதைத்தொடர்ந்து அடுத்ததாக வினோத் தனுசுடன் கூட்டணி அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ அப்படத்தை தயாரிக்க இருக்கிறது.

தனுஷ் தற்போது வாத்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதை தொடர்ந்து கேப்டன் மில்லர் திரைப்படமும் அவருடைய நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை முடித்துவிட்டு அவர் வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படி இரு பெரும் நடிகர்களை வைத்து படம் எடுக்க தயாராகும் வினோத் இடைப்பட்ட கேப்பில் யோகி பாபுவை வைத்தும் ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.

Also read: உச்ச கட்ட டென்ஷனில் வாரிசு, துணிவு.. பழசை கிளறி மூட்டிவிடும் ப்ளூ சட்டை மாறன்

அது மட்டுமல்லாமல் இன்னும் சில நடிகர்களும் இவருடைய இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இப்படி அவருடைய மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்வதற்கு அஜித் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறார். இதற்கு முன்பு இவருடைய திரைப்படங்கள் அதிக கவனம் ஈர்த்தாலும் வரிசையாக அஜித்துடன் இணைந்ததுதான் வினோத்தை இன்னும் அதிக பிரபலமாக்கி இருக்கிறது.

மேலும் துணிவு திரைப்படமும் தற்போது மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. நிச்சயம் இப்படம் வேற லெவல் வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் வினோத் உலக நாயகனை இயக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார். அந்த வகையில் இவருடைய அடுத்தடுத்த திரைப்படங்களுக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read: ஒரு வழியாக முதுகில் இருந்து இறங்கிய வேதாளம்.. அடுத்த படத்திற்கு நடிப்பு ராட்சசனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வினோத்

Trending News