சோசியல் மீடியா பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் அனைத்து விஷயங்களும் உடனுக்குடன் மக்களை சென்றடைந்து வருகிறது. அதிலும் திரையுலகை பொருத்தவரை எந்த ஒரு அப்டேட்டாக இருந்தாலும் அது உடனே ரசிகர்களின் பார்வைக்கு வருகிறது. அப்படித்தான் ஒரு திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே கலெக்சன் பற்றிய தகவல்களும் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் எப்போதுமே ரசிகர்கள் ஒவ்வொரு படத்தின் வசூலை பற்றியும் சோசியல் மீடியாக்களில் இவர் தான் அதிகம், அவர்தான் அதிகம் என்று விவாதம் செய்து வருவார்கள். அதிலும் தங்களுக்கு பிடித்த நடிகரின் படம் என்றால் சொல்லவே வேண்டாம். இதை பார்த்த தயாரிப்பாளர்களும் தற்போது படத்தின் உண்மை வசூலை கூறாமல் ரசிகர்களை ஏமாற்றும் வகையில் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
Also read: மறைமுகமாக காய் நகர்த்திய உதயநிதி.. தளபதி 67 படத்திற்கு பின் அஸ்தான இயக்குனருடன் இணையும் விஜய்
அதிலும் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற படமாக இருந்தாலும் குறிப்பிட்ட சில நாட்களிலேயே 100 கோடியை தாண்டி விட்டது என்றெல்லாம் செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது. இப்படி படத்தின் தயாரிப்பாளர்கள் எல்லாம் பொய் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் என்பதை எச் வினோத் வருத்தத்துடன் கூறியிருக்கிறார். துணிவு திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு வெற்றியை ருசித்திருக்கும் வினோத் அடுத்ததாக எந்த படத்தை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்து வருகிறது.
இந்நிலையில் இவர் துணிவு திரைப்படம் குறித்த பல விஷயங்களை பிரபல சேனல்களின் மூலமாக ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அதில் தான் அவர் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் பற்றிய புது ஐடியா ஒன்றையும் தெரிவித்திருக்கிறார். அதாவது வெளிநாடுகளில் எல்லாம் ஒரு படம் ரிலீஸ் ஆகிவிட்டால் அதன் கலெக்சன் பற்றிய விவரம் அனைத்தும் மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஒரு முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
Also read: இப்ப வரை வாரிசு மற்றும் துணிவு படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்.. நம்பி மோசம் போயிட்டோமே!
அதேபோன்று கோலிவுட்டிலும் பின்பற்றப்பட்டு வந்தால் தான் பல பிரச்சனை முடிவுக்கு வரும் என்று கூறியிருக்கிறார். ஏனென்றால் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் பற்றி பேசியே பல பிரச்சினைகள் உருவாகிறது. அதிலும் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் அதை பெரிய சண்டையாக மாற்றி ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்கின்றனர்.
இப்படியே சென்றால் அது சினிமாவுக்கு மிகப்பெரிய ஆபத்தை தரும் என்றும் ரசிகர்களும் தவறான செயல்களில் ஈடுபடக்கூடும் என்றும் வினோத் தெரிவித்திருக்கிறார். அதை தடுப்பதற்காகவே உண்மையான வசூல் ரசிகர்களுக்கு தெரிய வேண்டும். அதை தயாரிப்பாளர்கள் உணர்ந்து உண்மையை மட்டுமே கூற வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அவருடைய இந்த கருத்து வரவேற்கப்பட்டு வருகிறது.
Also read: மீண்டும் ஓடிடி-யில் மல்லுக்கட்டும் வாரிசு, துணிவு.. ஒரே நாளை குறி வைத்த அமேசான், நெட் பிளிக்ஸ்