விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களைப்போல விறுவிறுப்பு கம்மியாக இருந்ததாக கருத்துக்கள் வெளிவந்தன.
மேலும் லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதியதால் ஆங்காங்கே சொதப்பி விட்டது என தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டார்.
ஆனாலும் விஜய் சாருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தை பார்த்து மிரண்டு விட்டதாகவும், படம் இவ்வளவு பெரிய கலெக்ஷன் பெற்று மிகப்பெரிய பொறுப்பை கொடுத்து விட்டது எனவும் லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒருபுறமிருக்க விஜய்யின் போட்டியாளராக தமிழ் சினிமாவில் கருதப்படும் தல அஜித்தின் வலிமை படத்தை உருவாக்கி கொண்டிருப்பவர் தான் வினோத். லோகேஷ் கனகராஜ் போலவே தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இயக்குனர்களில் வினோத்தும் ஒருவர்.
வினோத் இயக்கத்தில் வெளியான சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்கள் மரண மாஸ் ஹிட் அடித்தது. அதேபோல் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரீமேக் படமாக இருந்தாலும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் சமீபத்தில் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு வினோத் தன்னுடைய வட்டாரங்களில், இரண்டு முன்னணி நடிகர்களை திறமையாக லோகேஷ் கையாண்டுள்ளார் எனவும், மாஸ்டர் படம் தனக்கு ரொம்ப பிடித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் என்கிறார்கள் வலிமை வட்டாரங்கள்.