வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

3 கதைகளை வைத்துக்கொண்டு சுத்தும் ஹெச்.வினோத்.. தனுஷ் உடனே ஓகே சொல்லிய கதை

எச்.வினோத் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவர இருக்கும் படம் துணிவு. இந்தப் படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னர் அடுத்த கதைக்களத்துடன் ரெடியாகி விட்டார். ஒரு கதை மட்டுமல்ல இவர் கையில் மூன்று படத்திற்கான கதைகள் ரெடியாகி இருக்கிறது. இந்தக் 3 கதைகளை வைத்துக்கொண்டு தனது படத்திற்கான நடிகரை தேடி சுற்றிக் கொண்டு இருந்தார்.

பின்பு இவர் இந்த மூன்று கதைகளையும் தனுஷிடம் சொல்லியிருக்கிறார். இந்த மூன்று கதையுமே கேட்ட தனுஷ் கண்மூடித்தனமாக ஒரு கதையை தேர்வு செய்துள்ளார். மேலும் அந்த கதை தனுசுக்கு மிகவும் பிடித்ததாம். இப்படி அந்தக் கதையின் கதாபாத்திரம் பிடித்துப்போகவே இதை நான் கண்டிப்பாக பண்ணுகிறேன் என்று வாக்குறுதியும் கொடுத்துவிட்டாராம்.

Also read: தனுஷுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா.. 7 வருடம் கழித்து எடுக்கும் புது அவதாரம்

அப்படி அவர் ஓகே சொன்ன கதை நெகட்டிவ் ரோல் கேரக்டராம். சமீபத்தில் வெளிவந்த நானே வருவேன் படத்தில் அவர் நெகட்டிவ் ரோலில் அசத்தியிருந்தார். இந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் தனுஷ் அவருக்குரிய கதாபாத்திரத்தை முழுமையாக செய்திருப்பார்.

இப்படி இருக்க தனுஷ் தனக்கான கதைக்களத்தை அஜித், விஜய் சேதுபதி மற்றும் சூர்யா பாணியில் நெகட்டிவ் கேரக்டருக்கு மாற்றி வருகின்றார் என்பது தெரிகிறது. மேலும் சதுரங்க வேட்டையில் நடித்த நட்டி நட்ராஜ் கதாபாத்திரம் போல கதை இருப்பதாகவும் அதனால் தான் தனுஷ் உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.

Also read: முதல் நாள் புக்கிங் வசூல் விவரம்.. துணிவுடன் சொன்ன கணிப்பை தவுடு பொடியாக்கியதா வாரிசு.?

ஏனென்றால் சதுரங்க வேட்டையில் படம் மிகப்பெரிய வெற்றிவாய்ப்பை கொடுத்தது. அதுமட்டுமல்லாமல் அந்தப் படத்தில் வில்லத்தனம் கலந்த ஹீரோயிசம் என வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டிருந்தது. எல்லாருக்கும் சவால் விடும் விதமாக இந்த நெகட்டிவ் ரோலை தேர்வு செய்திருக்கிறார்.

பின்னர் இயக்குனர் வினோத் மற்ற இரண்டு கதையே கொண்டு நடிகர் யோகிபாபுவிடம் சொல்லியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படி இரண்டு கதைக்கும் நடிகர் தேர்ந்தெடுத்த பிறகு மூன்றாவது கதை யாரை வைத்து யாரிடம் சொல்ல போகிறார் என்று மற்ற நடிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also read: அஜித்தின் இயக்குனர் என்பதை நிரூபித்த வினோத்.. ரசிகர்களுக்கு கொடுத்த அட்வைஸ்

Trending News