தமிழ் சினிமாவில் நந்தா படத்தின் மூலம் அறிமுகமானவர் வினோத் கிஷன். முதல் படத்திலேயே சூர்யா படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அடுத்தடுத்து இவருக்கு படங்கள் நடிப்பதற்கான ஆர்வம் இல்லாததால் படிப்பில் கவனம் செலுத்தி வந்துள்ளார்.
பின்பு காலேஜ் படிக்கும்போது தான் இவருக்கு நான் மகான் அல்ல படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் இவருடைய கதாபாத்திரத்தை பற்றி சுசீந்திரன் கூறியுள்ளார். வில்லன் கதாபாத்திரம் பிடித்துப்போக இதற்கு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொண்டு அப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
இப்படத்திற்கு பிறகு இவருக்கு ஏராளமான படங்களில் வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்துள்ளன. ஆனால் முக்கியமான கதாபாத்திரத்தில் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்துள்ளார். இவரது நடிப்பில் உருவான விடியும் முன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
அதன்பிறகு இவர் நடிப்பில் இரண்டு படங்கள் அனைத்துமே வெளியாவதற்கு தாமதமாகி என இதனைப் பற்றி அவரிடம் கேட்டபோது. ஒரு படத்தில் நடிப்பது மட்டும் தான் நம்மிடம் உள்ளது படம் வெளியாவது குறித்து முடிவு பண்ணுவது படக்குழுவினர் தான் நான் தேர்ந்தெடுக்கும் கதைகள் அனைத்தும் வித்தியாசமாக இருப்பதால் படங்கள் வெளிவர நேரம் ஆகின்றன என கூறியுள்ளார்.
பின்பு அந்த காரன் திரைப்படம் தனக்கு புதிய அனுபவத்தை கொடுத்ததாகவும் இப்படத்தில் நடித்ததை பார்த்து இயக்குனர் ஒருவர் தன்னை வைத்தே ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கியதாகவும் கூறியுள்ளார். அந்த அளவிற்கு அந்த காரன் நடிப்பை பலரும் பாராட்டியதாக கூறினார்.
இவரது நடிப்பில் வெளியான குட்டி ஸ்டோரி சீரியஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. தொடர்ந்து இவருக்கு பெருவாரியான பட வாய்ப்புகள் வந்தாலும் ஒரு சில படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருவதாக கூறியுள்ளார். தற்போது ஒரு சில படங்கள் வெளிவர இருப்பதாகவும் கூறியுள்ளார்.