உண்மை கதை இல்ல உண்மையாக போற கதை.. ஜனநாயகன் ஸ்பெஷல் அப்டேட்

Jana Nayagan: வினோத், விஜய் கூட்டணியில் ஜனநாயகன் உருவாகி கொண்டு இருக்கிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைய இருக்கிறது.

அதை அடுத்து அவர் தீவிர அரசியலில் இறங்க இருக்கிறார். அது ஒரு பக்கம் இருக்க ஜனநாயகன் அவரின் கடைசி படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

அதேபோல் படத்தின் வியாபாரமும் கோடிக்கணக்கில் லாபத்தை கொடுத்துள்ளது. அதன்படியே டிஜிட்டல் உரிமம் 121 கோடிக்கும் சாட்டிலைட் உரிமம் 55 கோடிகளுக்கும் விற்பனையாகியுள்ளது.

மேலும் படம் பொங்கலுக்கு வெளியாகும் நேரத்தில் எந்த மாதிரியான அரசியல் இடையூறுகள் வரும் எனவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஏனென்றால் இதற்கு போட்டியாக ரெட் ஜெயன்ட் பராசக்தியை ரிலீஸ் செய்ய உள்ளது.

ஜனநாயகன் ஸ்பெஷல் அப்டேட்

இதில் பராசக்தி 60 காலகட்டத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு சம்பவத்தை மையப்படுத்தியது. அதேபோல் ஜனநாயகன் முழுக்க முழுக்க அரசியல் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகி வருகிறது.

இதில் மற்றொரு ஸ்பெஷலும் இருக்கிறது. என்னவென்றால் படம் முழுக்க விஜய் ஏகப்பட்ட பஞ்ச் டயலாக்குகளை பேசுவாராம்.

சில வருடங்களுக்கு முன்பு விஜய் என்றாலே பஞ்ச் டயலாக் என்று சொல்லும் அளவுக்கு அவர் படத்தில் நிறைய வசனங்கள் இருக்கும். போகப் போக அது குறைந்தது.

ஆனால் ஜனநாயகன்படத்தில் கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட பஞ்ச் டயலாக்குகள் இருக்கும் என கூறப்படுகிறது. இது தமிழக வெற்றி கழகத்திற்கு பிரச்சார மேடைகளில் நிச்சயம் பயன்படும்.

அந்த அளவுக்கு வசனங்கள் ஒவ்வொன்றும் தீயாக இருக்குமாம். இதற்காகவே உதவி இயக்குனர்கள் ஏகப்பட்ட ஹோம் வொர்க் செய்திருக்கிறார்கள்.

அது மட்டும் இன்றி இது உண்மை சம்பவம் கிடையாது. வரும் காலத்தில் உண்மையாக போகும் சம்பவம் என வினோத் கூட குறிப்பிட்டிருந்தார். ஆக மொத்தம் ஜனநாயகன் புது மாற்றத்திற்கு வித்திடுமா என பார்ப்போம்.

Leave a Comment