வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

உன் போதைக்கு நா ஊறுகாவா.? அர்ச்சனாவின் சாயத்தை வெளுத்த கண்ணம்மா

Archana-Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோட் வேற லெவலில் இருக்கப் போகிறது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்ற போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொருவராக இப்போது வந்து கொண்டிருக்கின்றனர்.

அதில் அனன்யா, அக்ஷயா, வினுஷா ஆகியோர் தற்போது வீட்டுக்குள் இருக்கின்றனர். இதில் வினுஷாவின் என்ட்ரியை தான் ஆடியன்ஸ் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அதற்கு குறை வைக்காமல் தற்போது அவர் நம் மனதில் இருப்பதை எல்லாம் கொட்டி தீர்த்துள்ளார்.

அதன்படி இன்று வெளியான ப்ரோமோவில் நிக்சனை 70 கேமராக்களுக்கு முன்னால் வைத்து கேள்வி கேட்பேன் என கூறியது தரமான சம்பவமாக இருந்தது. அதை அடுத்து அர்ச்சனாவின் முகத்திரையும் அவர் கிழித்துள்ளார். பிக்பாசின் ஆரம்பத்தில் ஒன்னும் தெரியாத பாப்பா போல் இருந்த அச்சு இரண்டாவது வாரத்திலேயே தன் குணத்தை காட்டினார்.

Also read: பப்ளிசிட்டி பைத்தியமான பீனிக்ஸ் பூர்ணிமா.. மீரா மிதுன் 2.0, 16 லட்சம் இதுக்கே சரியாயிடும் போல

அதற்கு அவர் கையில் எடுத்த ஆயுதம் தான் பிரதீப். அதை அடுத்து வினுஷா விஷயத்தையும் கையில் எடுத்து உரிமை குரல் தூக்கினார். இதனால் நிக்சன் பெயர் பயங்கர டேமேஜ் ஆனது. தற்போது அதைப்பற்றி கூறியிருக்கும் வினுஷா உன்னோட கேமுக்கு என் பெயரை எதுக்கு யூஸ் பண்றீங்க.

உங்களுக்கு ஒரு பிரச்சனை வரும்போது என்ன பத்தி பேசி ஸ்கோர் செய்றீங்க. ஆனா பிக்பாஸ் வீட்டுக்கு வந்தப்ப நிக்சனிடம் சும்மா சாரி சொல்லிடு. வினுஷா விஷயத்தை மக்கள் மறந்துருவாங்கன்னு சொன்னீங்க என சவுக்கடி கேள்விகளை கேட்டு அர்ச்சனாவை திணற வைத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அர்ச்சனா நான் சின்ன புள்ளத்தனமா பேசினேன் என சாக்கு போக்கு சொல்லினார். ஆனாலும் வினுஷா விடாமல் கேள்வி கேட்டு அவரை வாயடைக்க வைத்தார். உண்மையில் அர்ச்சனா மற்றவர்களை தன் கேமிற்காக பயன்படுத்திக் கொள்கிறார். இது ஆடியன்ஸ் மனதில் இருந்தாலும் பிக்பாஸ் இப்போது தான் அதை வெளிச்சம் போட்டு காட்டுகிறார்.

Also read: காயம் பட்ட சிங்கத்தின் கர்ஜனை.. நிக்சனை பழி தீர்க்க காத்திருக்கும் வினுஷா

Trending News