புதன்கிழமை, நவம்பர் 27, 2024

புரட்சித் தலைவருக்காக தியேட்டரையே கொளுத்திய சம்பவம்.. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியால் வந்த வினை

Actor MGR: அரசியலிலும் தமிழ் சினிமாவிலும் தனி ஆதிக்கம் செலுத்திய புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மீது அவருடைய ரசிகர்கள் வெறித்தனமாய் இருந்துள்ளனர். இதனால் அவருடைய படம் ரிலீஸ் ஆனபோது கிளைமாக்ஸ் காட்சியை பார்த்துவிட்டு தியேட்டரையே கொளுத்தி உள்ளனர்.

1956 இல் வெளிவந்த எம்ஜிஆர் நடித்த மதுரை வீரன் மிகப்பெரிய வெற்றி படமாக கொண்டாடப்பட்டது. யோகானந்த் இயக்கிய இந்த படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக பத்மினி நடித்தார். இதில் மக்கள் தெய்வமாக வணங்கும் மதுரை வீரனின் கதையை மையப்படுத்தி படத்தின் திரைக்கதையை அமைத்தனர்.

Also Read: எம்ஜிஆரை எதிர்த்து நின்ற ஒரே நடிகை.. உங்க இஷ்டத்துக்கு நடிக்க முடியாது, சம்பளத்தை திருப்பிக் கொடுத்த அவலம்

இந்த படத்தில் எம்ஜிஆர் கடைசி காட்சியில் மாறு கை மாறு கால் வாங்கி தண்டனை கொடுத்து இறந்து போவதாக காட்சி இடம்பெற்றது. இதை ஏற்றுக் கொள்ளாத ரசிகர்கள் பரமக்குடியில் ஒரு தியேட்டரை கொளுத்தி விட்டனர். இதை எம்ஜிஆர் எதிர்பார்க்கவில்லை.

படத்தில் கூட எம்ஜிஆர் இறந்து போனதை பார்க்க முடியாத புரட்சித்தலைவரின் ரசிகர்கள் தியேட்டர்களை கொளுத்தி வன்முறையை கிளப்பினார்கள். இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் பதட்டத்தில் பயந்து இருந்தனர். இந்த காட்சியை நீக்கும்படி ரசிகர்கள் கூறினார்கள்.

Also Read: ஈகோ காரணமாக சண்டை போட்ட 5 நட்சத்திரங்கள்.. சீமான் விஜயலட்சுமிக்கு முன்னாடி ஜோ போட்ட சண்டை

ஆனால் தயாரிப்பு தரப்பு இது வரலாற்று திரைப்படம் நீக்க முடியாது என்று சொல்லிவிட்டனர். அதன் பின் என் எஸ் கிருஷ்ணன் சிறந்த யோசனை செய்து கடைசி காட்சியில் என் எஸ் கிருஷ்ணன் தோன்றி எம்ஜிஆர் அவர்கள் எங்கு செல்கிறார், தெய்வமாக இருந்து நம்மளை பாதுகாக்க என்று கூறினார்.

இதன் பின் ஓரளவிற்கு பதற்றம் நீங்கி தமிழ்நாட்டில் இந்த படம் நன்றாக ஓடி மிகப் பெரிய வெற்றி பெற்றது. இது மறக்க முடியாத சம்பவமாக இன்றும் தமிழ்நாட்டில் பேசப்படுகிறது. இது மாதிரி வேற எந்த ஹீரோவுக்கும் நடந்தது இல்லை.

Also Read: வெளிநாட்டு சரக்கை காட்டி கால்ஷீட் வாங்கிய முதலாளிகள்.. 42 வயசுலயே ஈரக்குலை வெந்து செத்த எம்ஜிஆரின் செல்லப்பிள்ளை

- Advertisement -spot_img

Trending News