Shruthi Haasan: உலக நாயகனின் மகள் ஸ்ருதிஹாசன் ரஜினியுடன் கூலி படத்தில் நடித்து வருகிறார். இது தவிர தெலுங்கு படமும் அவர் கைவசம் இருக்கிறது.
மேலும் டகோயிட் படத்தில் இருந்து தற்போது இவர் விலகி இருக்கும் தகவல் மீடியாவில் பரபரப்பாகி வருகிறது. இந்நிலையில் மும்பையில் இவர் நைட் பார்ட்டியில் கலந்து கொண்ட போட்டோவும் வைரல் ஆகிறது.
அம்மா அப்பாவுடன் இல்லாமல் தனியாக வசித்து வரும் ஸ்ருதி மும்பையில் தான் இருக்கிறார். அங்கு இவர் அடிக்கடி தன் நண்பர்களுடன் பார்ட்டியில் கலந்து கொள்வது வழக்கம்.
கழுத்தில் சிலுவையுடன் ஸ்ருதிஹாசன்
அப்படித்தான் தற்போது அவரின் லேட்டஸ்ட் போட்டோ வெளியாகி இருக்கிறது. நைட் பார்ட்டி முடித்துவிட்டு நண்பர்களுடன் வரும் அவர் செய்தியாளர்களை பார்த்து கையசைத்து விட்டு காரில் எரி செல்கிறார்.
அந்த வீடியோவும் போட்டோவும் வெளியாகி உள்ளது. அதில் ஸ்ருதி கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப் மற்றும் ஜீன்ஸ் அணிந்துள்ளார்.
இந்த கிளாமர் லுக் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதைவிட அவர் கழுத்தில் அணிந்திருக்கும் சிலுவை தான் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
ஒருவேளை ஸ்ருதி மதம் மாறிவிட்டாரோ என்று கூட ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் சாதாரணமாக அவர் இந்த செயினை அணிந்திருக்கலாம் என கூறப்படுகிறது.