வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஆலியாவின் மாமியாரா இது.? இளம் வயதில் பீச்சில் ரொமான்ஸ்

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ராஜா ராணி2 சீரியல் ஆனது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் ஏற்கனவே விஜய் டிவியில் மதியத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ‘என் கணவன் என் தோழன்’ என்ற ஹிந்து சீரியலின் கதையை வைத்து தமிழ் நடிகர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே ராஜா ராணி2 சீரியலில் ஆலியா மானசாவிற்கு கண்டிப்பான மாமியாராக நடித்துக் கொண்டிருப்பவர் தான் மலையாள நடிகை பிரவீனா. இவர் தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்திக்கு அம்மாவாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படத்திலும்,

அதைப்போல் விக்ரமுடன் சாமி 2, ஆர்யாவுடன் டெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல தமிழ் மற்றும் மலையாள சீரியல்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

மேலும் இவர் மலையாள திரையில் சுமார் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது விஜய் டிவியில் மட்டுமல்லாமல் சன் டிவி சீரியல்களிலும் அம்மாவாகவும் மாமியாராகவும் நடித்து பட்டையைக் கிளப்பி வருகிறார்.

இந்த சூழலில் நடிகர் பிரவீனா தன்னுடைய இளம் வயதில் கவர்ச்சியான உடை அணிந்து நடித்திருக்கும் படத்தின் வீடியோ காட்சியானது தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இந்த வீடியோவை பிரவீனாவின் ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கண்டு களிக்கின்றனர்.

Trending News