அடுத்த மாதம் நடக்கவிருக்கும் இருபது-20 ஓவர் உலக கோப்பை தொடருக்குப் பின் தமது கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்யப்போவதாக விராட் கோலி பிசிசிஐ-க்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மூன்று விதமான போட்டிகளிலும் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படுபவர் விராட் கோலி.
மற்ற நாடுகளில் 20 ஓவர், 50 ஓவர், டெஸ்ட் போட்டிகள் போன்றவற்றிற்கு தனித்தனி கேப்டன்கள் உள்ளனர். ஆனால் இந்திய அணியில் மட்டும் விராட் கோலி ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார். இது அவருக்கு பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவர் முழுமையாக தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை. சமீபகாலமாக நிலைத்து நின்று ஆடுவதற்கு அவர் பெரிதும் சிரமப்படுகிறார்.
இப்படி இருக்கும் சூழ்நிலையில், விராட் கோலி மிகவும் ஆக்ரோசபடுவதாகவும், பயிற்சியின்போது எவராவது அறிவுரை கூறினால் “என்னை குழப்பாதீர்கள்” என்று எரிந்து விழுவதாகவும், பிசிசிஐயிடம் இந்திய அணியில் இருக்கும் ஒரு வீரர் போட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இப்பேர்ப்பட்ட காரணங்களால்தான் விராத் கோலியின் ஆக்ரோஷதத்தையும், மன அழுத்தத்தையும் குறைக்க, பிசிசிஐ மகேந்திர சிங் தோனியை இந்திய அணியின் ஆலோசகராக நியமித்துள்ளதாக தெரிகிறது.