ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

விராட் கோலி எடுக்கப்போகும் விபரீத முடிவு.. நாளை தொடங்கவிருக்கும் 4வது டெஸ்ட் போட்டி வெற்றி யாருக்கு.?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவிருக்கும் நிலையில் இந்திய அணியில் பல மாற்றங்களை கேப்டன் விராட் கோலி கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது.

நான்காவது போட்டியில் இங்கிலாந்து அணியிலும் பல மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓவல் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. அதனால் இந்திய அணியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இறங்க அதிக வாய்ப்பு உள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இதுவரை களமிறங்கி உள்ளது. ஆனால் தற்போது நடைபெறும் போட்டியில் சீனியர் வீரர் இஷாந்த் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் களம் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து மண்ணில் எப்பொழுதுமே சிறப்பாக பந்து வீசி வரும் இஷாந்த் ஷர்மா இம்முறை விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறி வருகிறார். ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின் கவுண்டி கிரிக்கெட்டில் தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் அசத்தி வருகிறார்.

Ashwin-Cinemapettai.jpg
Ashwin-Cinemapettai.jpg

ஆகையால் விராட் கோலி, இசாந்த் சர்மாவிற்கு பதிலாக அஸ்வினை எடுப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.

Trending News