சனிக்கிழமை, நவம்பர் 16, 2024

கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி ராஜினாமா! வரவிருக்கும் புதிய கேப்டனால் பெருகும் எதிர்பார்ப்பு

இந்திய கிரிக்கெட் அணியில் தோனிக்கு பின் கேப்டன் பொறுப்பை ஏற்று நடத்தியவர் விராட்கோலி. இதுவரை  ஐசிசி நடத்தும் ஒரு தொடர்களில் கூட, அவர் தலைமையில் இந்திய அணி கோப்பையை வென்றதில்லை.

தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி தொடரை வெற்றி பெற்றிருந்தாலும், விராட் கோலியின் பங்களிப்பு மோசமாக இருந்தது. பெரிய சதங்கள் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

England-Cinemapettai-1.jpg
England-Cinemapettai-1.jpg

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் ஒவ்வொரு வடிவிலான போட்டிகளுக்கும், தனித்தனி கேப்டன் வைத்துள்ளது. ஆனால் இந்திய அணிக்கு மட்டும்அனைத்து விதமான போட்டிகளிலும் விராட் கோலியே கேப்டனாக செயல்படுகிறார். ஆகையால், இவரால் கேப்டன்ஸி அழுத்தத்தை சரியாகச் சமாளிக்க முடியவில்லை.

கடந்த இரண்டு வருடங்களாக விராத் கோலி சதம் அடிக்க முடியாமல் திணறி வருகிறார் இதற்கு பணிச்சுமை ஒரு காரணமாக அமைந்துள்ளது. இதனால் வருகிற 20 ஓவர் உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் தனது கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்யப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விராட் கோலி.

Virat-Cinemapettai-4.jpg
Virat-Cinemapettai-4.jpg

விராத் கோலிக்கு பின் இந்திய அணிக்கு யார் கேப்டன் பொறுப்பை ஏற்று நடத்துவார் என்ற பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. தற்போது இருக்கும் சூழ்நிலையில் ரோஹித் சர்மா தான் அடுத்த கேப்டனாக வருவார் என பிசிசிஐ பொறுப்பில் உள்ள அதிகாரி ஒருவர் கூறியதாக பேச்சுக்கள் அடிபடுகிறது.

- Advertisement -spot_img

Trending News