ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

விராட் கோலியை பிபிசிஐயிடம் போட்டுக்கொடுத்த சீனியர்.. கடைசியில் வெளிவந்த உண்மை!

விராட் கோலியின் மோசமான ஆட்டிட்யூட், மற்றவர்களிடம் எரிந்து விழும் பழக்கம், பயிற்சியின் போது யாராவது அறிவுரை கூறினால், என்னை குழப்பாதீர்கள் என கோபப்படும் கேரக்டர், இவையெல்லாம்தான் இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணியில் நடைபெற்றிருக்கும் ஒரு ஹாட் டாபிக்.

அடுத்த மாதம் நடக்கவிருக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி முடிந்த பின்னர் விராட் கோலி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக பிசிசிஐ-க்கு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்குப் பின்னால் பல “Politics” பேசப்படுகிறது.

கேப்டன் பணிச்சுமையினால் விராத் கோலிக்கு பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை எனவும், அவருக்குப் பிடித்த பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதவி விலகப் போவதாகவும், பிடிக்காத அனில் கும்ப்ளே மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு வரப் போவதாகவும் பேச்சுக்கள் அடிபடுவதால், இதனை மனதில் வைத்துக்கொண்டு தான் விராட் கோலி தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலக உள்ளார் என கூறப்படுகிறது.

RaviKumble-Cinemapettai.jpg
RaviKumble-Cinemapettai.jpg

மறுபுறம் பிபிசிஐயிடம் விராட் கோலியின் ஆட்டிட்யூட் பற்றியும், மற்றவர்களை மதிக்காத கேரக்டர் பற்றியும், இந்திய அணியில் உள்ள சீனியர் வீரர் ஒருவர் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வீரர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் எனவும், அதனால்தான் இங்கிலாந்து தொடரில் எல்லாப் போட்டிகளிலும் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டார் எனவும் பிசிசிஐ பொறுப்பில் உள்ள ஒருவர் கூறிவருகிறார்.

Ash-Cinemapettai-1.jpg
Ash-Cinemapettai-1.jpg

Trending News