சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

கடைசிவரை பதட்டதுலேயே வச்சிருவானுங்களோ.. புலம்பிய கோலி

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி மும்பை அணியை கடைசி ஓவர் கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் விராத் கோலி முழுதாக திருப்தி அடையவில்லை. என்னை கடைசி வாரத்திலேயே வச்சிருவானுங்களோ என புலம்பித் தள்ளி விட்டார் மனுஷன்.

ஏற்கனவே பெங்களூர் அணியை கிண்டலும் கேலியுமாக ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் முதல் போட்டியை பெங்களூர் அணியும் நடப்பு சாம்பியனான மும்பை அணிக்கும் நடைபெற்றது.

முதலில் விளையாடிய மும்பை அணியில் ரோகித் சர்மாவும், க்ரிஸ் லீனும் ஆடிய ஆட்டத்தைப் பார்த்தால் கலங்கிய போய்விட்டார் விராட் கோலி. நல்லவேளையாக ரோகித் சர்மா ரன் அவுட் ஆனார். அதன் பின் சூரியகுமார் இஷான் கிஷன் வந்து அவர்களுடைய பங்கிற்கு ஒரு அடி அடித்து விட்டனர். கடைசியில் ஒரு வழியாக மும்பை அணியை 159 ரன்களில் சுருட்டி விட்டனர்.

அடுத்து பெங்களூர் அணி யாரும் எதிர்பாராதவிதமாக வாஷிங்டன் சுந்தர் உடன் களமிறங்கினார் விராட் கோலி. நிதானமான ஆட்டம் தான் ஆடினார்கள். ஆனால் வரிசையாக விக்கெட் சரியத் தொடங்கியது. ஏ பி டி வில்லியர்ஸ் வந்துபின் தான் கோலிக்கு போன உயிர் திரும்ப வந்தது.

ஏ பி டி வில்லியர்ஸ் 2 சிக்ஸர்கள் அடித்தது கோலிக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது. ஆனால் அதுவும் நிலைக்கவில்லை. அவரும் ரன் அவுட் ஆனார். இதனால் கோலி இன்னும் டென்சன் ஆனார்.அடுத்து இறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனை கண்டு கோழி வெறுப்பாகி விட்டார்.

கடைசியில் ஹர்ஷல் பட்டேல் அவசரபடாமல் விளையாடியதால் கடைசி ஓவர் கடைசி பந்தில் வெற்றியை பெற்றது பெங்களூர் அணி. அதனால் அடுத்த போட்டியில் சில பல மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதாக கூறினார் யோசிக்கிறார்கள்

virat kohli ipl 2021
virat kohli

இப்படியே பெங்களூரு அணி விளையாடினால் மீம்ஸ் போட்டே கோலியை வச்சி செய்துவிடுவார்கள். இந்த முறையாவது இறுதிப்போட்டி வரை செல்ல வேண்டும் என விராட் கோலி கங்கணம் கட்டி வருகிறாராம். ஆனால் சிஎஸ்கே அணியும் மும்பை அணியும் விளையாடுவதை பார்த்தால்தான் கோலியின் கனவு பலிக்குமா பலிக்காதா என்று ஹீரியும்.

Trending News