திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஒரே சாயலில் இருக்கும் விருமன், திருச்சிற்றம்பலம்.. யாரு யாரை காப்பி அடிச்சான்னு தெரியல!

முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர் நடிப்பில் வெளிவந்த விருமன் திரைப்படம் தற்போது வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. காதல், ஆக்சன், சென்டிமென்ட் என்று கலவையாக வெளிவந்துள்ள இந்த திரைப்படம் தற்போது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.

அதேபோன்று தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படமும் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. தற்போது இந்த இரண்டு படங்களையும் பார்த்த ரசிகர்கள் இரண்டுமே ஒரே சாயலில் இருப்பதாக கூறி வருகின்றனர்.

Also read: டாப் ஹீரோவுக்கு வலைவிரிக்கும் அதிதி சங்கர்.. அம்மணி உங்க ஆசைக்கு ஒரு அளவே இல்லையா!

அதாவது இரண்டு திரைப்படத்திலும் பிரகாஷ் ராஜ் தான் ஹீரோவுக்கு அப்பாவாக இருக்கிறார். விருமன் திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் மற்றும் கார்த்தி இடையே ஏகப்பட்ட மோதல் காட்சிகளும், பிறகு சென்டிமென்ட் காட்சிகளும் இடம் பெற்றிருக்கும்.

அதே போன்று தான் திருச்சிற்றம்பலம் படத்திலும் தனுஷ், பிரகாஷ்ராஜ் இடையே பல மோதல் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. விருமன் படத்தில் பிரகாஷ்ராஜ் தாசில்தாராக இருப்பார், திருச்சிற்றம்பலம் படத்தில் அவர் போலீசாக இருக்கிறார்.

Also read : பாக்ஸ் ஆபிஸை சுக்குநூறாக்கிய ‘திருச்சிற்றம்பலம்’.. முதல் நாள் கலெக்சன்

மேலும் அதில் கார்த்திக்கு பக்க பலமாக தாய்மாமன் ராஜ்கிரண் இருப்பார். இந்த படத்தில் தனுஷுக்கு ஆதரவாக தாத்தா பாரதிராஜா இருப்பார். அது மட்டுமல்லாமல் விருமன் படத்தில் ஹீரோயின் கார்த்தியின் உறவுக்கார பெண்ணாக இருப்பார்.

திருச்சிற்றம்பலம் படத்தில் ஹீரோயின் தனுஷின் சிறு வயது தோழியாக இருப்பார். இப்படி இந்த இரண்டு படங்களுக்கும் ஏகப்பட்ட ஒற்றுமைகள் இருக்கிறது. இதனால் எந்த படத்தை பார்த்து யார் காப்பியடித்தார்கள் என்று தெரியவில்லை என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

சினிமாவை பொருத்தவரை ஒரே சாயலில் படங்கள் வெளிவருவது பெரிய ஆச்சரியம் இல்லை. ஆனால் இப்படி அட்டை காப்பியாக இருக்கும் படங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகி இருப்பது இதுவே முதல் முறை. இதை வைத்து ரசிகர்கள் தற்போது ஒரு புது பிரச்சனையை கிளப்பி விட்டுள்ளனர்.

Also read : தூரமா நின்னு ரசித்துப் பார்த்த கார்த்தி.. விஜய் ஆல் டைம் ஃபேவரிட் இந்த படம்தான்

Trending News