Tatham Twitter Review: விஷால், ஹரி கூட்டணியின் ரத்னம் இன்று வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே தாமிரபரணி, பூஜை என இவர்களுடைய கூட்டணி கவனம் பெற்ற நிலையில் ஹர்ட்ரிக் வெற்றி பெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதன்படி பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, கௌதம் மேனன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். வழக்கமான ஹரியின் ஆக்சன் ஃபார்முலாவும் இதில் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது.
அதிலும் ட்ரெய்லர் ஒரு பஞ்சாயத்தையும் கூட்டியது. அதை எல்லாம் கூலாக சமாளித்த ஹரி படத்தை தீவிரமாக ப்ரமோஷன் செய்தார்.
மேலும் நேற்று படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது என விஷால் ஒரு குண்டை போட்டார். அதை எல்லாம் கடந்து இன்று படம் வெளியான நிலையில் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
அதில் சண்டை காட்சிகள் அனைத்தும் வழக்கம் போல அனல் பறக்கிறது. மேலும் விஷால் பழைய ஃபார்முக்கு வந்து விட்டார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஆக மொத்தம் செய்த ப்ரோமோஷன் எதுவும் வீண் போகவில்லை. முதல் காட்சி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் படத்தின் வசூல் நிலவரமும் விரைவில் தெரியவரும்.