செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

படக்குழுவில் விஷால் கொடுத்த சர்ப்ரைஸ்.. பாஸ் நீங்க ரொம்ப நல்லவர் தான்

ஆர்யா, விஷால் நடிப்பில் வெளியான எனிமி திரைப்படம் பரவலாக வெற்றியை பெற்றது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து விஷால் தற்போது துப்பறிவாளன் 2, லத்தி போன்ற திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதில் லத்தி படத்தில் விஷாலுடன் இணைந்து நடிகை சுனைனா நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே விஷாலுடன் சமர் என்ற படத்தில் நடித்திருந்தார். வினோத் குமார் இயக்கி வரும் இப்படத்தை நடிகர் ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் படு வேகமாக நடந்து வருகிறது. அதில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் தலைமையில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

அப்போது ஒரு நாள் படப்பிடிப்பில் அவர் தன்னுடைய திருமண நாளை பற்றி கூறியுள்ளார். திருமண நாளன்று படப்பிடிப்பில் இருக்கும் அவருக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து அவரது மனைவியை ஹைதராபாத்திற்கு வரவழைத்து இருக்கிறார்கள்.

Pieter-hein
Pieter-hein

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த தன் மனைவியுடன், பீட்டர் ஹெய்ன் தன்னுடைய திருமண நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். இதே போன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்டை திரைப்படத்தில் பீட்டர் ஹெய்ன் தன்னுடைய பிறந்தநாளை ரஜினி முன்னிலையில் கொண்டாடியுள்ளார்.

இவர் சினிமாவில் அந்நியன், சிவாஜி உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் சிறப்பாக சண்டை காட்சிகள் அமைத்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இது தவிர தெலுங்கு, மலையாள திரைப்படங்களுக்கும் பயிற்சியாளராக இருந்து வருகிறார். மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த புலி முருகன் திரைப்படத்தில் சிறப்பாக சண்டை காட்சிகள் அமைத்ததற்காக இவர் தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

Trending News