தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விஷால் நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கம் என தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டு தனக்கு இருந்த நல்ல பெயரை ரிப்பேர் செய்து கொண்டார் என்றே பலரும் கூறுகின்றனர்.
செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி பின்னர் சண்டக்கோழி படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக உருவெடுத்தவர் விஷால். ஆனால் கடந்த சில வருடங்களாக விஷாலுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த படமும் அமையவில்லை. கடைசியாக விஷால் நடிப்பில் வெற்றி படம் என்று பார்த்தால் அது இரும்புத்திரை படம் மட்டும்தான்.
விஷால் மற்றும் கார்த்தி இருவருமே நடிகர் சங்கத்தில் தலைவர் மற்றும் பொறுப்பாளர் பதவிகளில் இருந்ததால் இருவரும் சேர்ந்து ஒரு படம் நடித்து அந்த பணத்தை வைத்து நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதாக முடிவு செய்தனர்.
கருப்பு ரோஜா வெள்ளை ராஜா என்ற பெயரில் உருவான அந்த படத்தை பிரபுதேவா இயக்கினார். மேலும் ஆர்யாவின் மனைவி சாயிசா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த படத்தை தயாரித்தவர் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனர் ஐசரி கணேஷ்.
இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தின் மொத்த கதையும் கேட்டு நடிக்க ஒப்புக் கொண்ட விஷால் மற்றும் கார்த்தி இருவரும் படப்பிடிப்புக்கு தயாராகி வந்தனர். மேலும் கார்த்திக் சரியாக படப்பிடிப்புக்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் விஷால் குறிப்பிட்ட நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வரவில்லை. மேலும் என்ன காரணம் என்பதையும் தெரிவிக்காமல் இழுத்தடித்ததால் அந்த படத்தை டிராப் செய்து விட்டேன் எனவும், இதனால் தனக்கு நான்கு கோடி ரூபாய் வரை நஷ்டம் ஆகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார் ஐசரி கனேஷ். ஐசரி கணேஷ் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார் என்பதும் கூடுதல் தகவல்.