புரட்சித் தளபதி விஷால் இரும்புத்திரை படத்திற்கு பின் அடுத்தடுத்து 3 தோல்வி படங்களை கொடுத்துள்ளார்.
தற்போது துப்பறிவாளன் 2, எனிமி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இழந்த மார்க்கெட்டை பிடித்து விடலாம் என்ற வைராக்கியத்தோடு உள்ளாராம்.
விஷால் 2004ல் வெளிவந்த செல்லமே படத்தின் மூலம் அறிமுகமானார் என்று தான் நமக்குத் தெரியும். ஆனால் 1989 பாண்டியராஜன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாண்டியராஜனின் ஜாடிக்கேத்த மூடி குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

சண்டக்கோழி, அவன் இவன், பாண்டிய நாடு, மருது, துப்பறிவாளன், இரும்புத்திரை போன்ற படங்களின் மூலம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சினிமாவை தாண்டி அரசியலிலும் கால் வைத்துள்ளார் விஷால்.
