நடிகர் சங்க கட்டடத்திற்காக சம்பளமின்றி கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தில் நடிக்க விஷால், கார்த்தி இருவரும் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இப்படத்தில் கதாநாயகியாக சாயிஷா நடித்திருந்தார். இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார்.
இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பது ஆக இருந்தார். விஷால், கார்த்திக்கு படம் வியாபாரம் ஆனவுடன் சம்பளம் தருகிறேன் என தயாரிப்பாளர் கூறியுள்ளார். ஆனால் கருப்பு ராஜா வெள்ளை ராஜா படம் ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இப்படத்தின் படப்பிடிப்பு மூன்று நாள் நடந்தது. இதில் கார்த்தி, விஷால் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். அதன் பிறகு இந்த கதை எனக்கு பிடிக்கவில்லை நான் நடிக்க மாட்டேன் என விஷால் சொல்லிவிட்டாராம். இதனால் நாலாவது நாள் படப்பிடிப்புக்கு விஷால் வரவில்லையாம்.
கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்திற்காக ஹாரிஸ் ஜெயராஜ் ஐந்து பாடல்கள் ரெக்கார்ட் செய்திருந்தாராம். அதுமட்டுமல்லாமல் இந்த மூன்று நாள் படப்பிடிப்புக்கு மட்டும் மூன்றரை கோடி செலவு செய்துள்ளார் ஐசரி கணேஷ். இது எல்லாமே விஷால் ஆல் வீணாகப் போய்விட்டது.
கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தின் லாபத்தின் மூலம் நடிகர் சங்க கட்டிடத்திற்கு பயன்படுத்தலாம் என்ற நோக்கத்துடன் தான் இந்த படம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் விஷால் மட்டும் இந்தப் படத்தில் நடித்திருந்தார் என்றால் இந்நேரம் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்து இருக்க முடியும்.
விஷாலுக்கு நடிகர் சங்க கட்டிடம் கட்ட எண்ணம் இல்லையோ, அல்லது உண்மையிலேயே விஷாலுக்கு கதை பிடிக்கவில்லை என்று தெரியவில்லை. ஏதோ ஒரு காரணத்தினால் இப்படத்திலிருந்து பாதியிலிருந்து விலகி விட்டார். ஆனால் தயாரிப்பாளர் தான் பாவம், மூன்று நாளிலேயே மூன்றரை கோடி நஷ்டத்தை சந்தித்து உள்ளார்.