வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

நேஷனல் டெலிவிஷன்ல என்னடா இது அசிங்கம்.. ஓவரா போகும் விஷால் தர்ஷிகா, பிரம்பை எடுப்பாரா VJS.?

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சி பாதி கிணறை தாண்டி விட்டது அதனால் அடுத்தடுத்த டாஸ்க்குகள் போட்டியாளர்களுக்கு சவாலாகவும் கடினமாகவும் இருக்கும்.

அதை வைத்து தான் இறுதிப்போட்டி வரை யார் செல்வார்கள் என்பதை கணிக்க முடியும். இதனால் ஒவ்வொருவரும் தங்களுடைய முயற்சியை கொடுத்து வருகின்றனர்.

ஆனால் வந்த வேலையை மறந்து விட்டு லவ் கன்டென்ட் கொடுத்து வருகிறது ஒரு ஜோடி. இதில் ஆரம்பத்தில் தர்ஷிகா கடுமையான போட்டியாளராக இருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் எப்போது விஷால் பக்கம் அவர் பார்வை திரும்பியதோ அப்போவே அவர் காலியாகி விட்டார். மொத்த வெறுப்பும் இப்போது அவர் மீது தான் இருக்கிறது.

ஓவரா போகும் விஷால் தர்ஷிகா

எப்போது பார்த்தாலும் கண்ணில் காதல் வழிய கிரிஞ்சாக நடந்து கொள்கிறார். ஆனால் அது காதலா இல்லையா என்பது அவருக்கே வெளிச்சம்.

vishal-dharshika
vishal-dharshika

அதனாலயே ஆடியன்ஸ் இந்த வாரம் இவருக்கு பாயாசத்தை போட நினைத்துள்ளனர். உங்கள் விருப்பப்படி நான் வெளியே போகிறேன் என்பது போல் தர்ஷிகா ஒரு கன்டென்ட் கொடுத்துள்ளார்.

அதாவது பிக்பாஸ் வீட்டு படுக்கையறையில் யாரும் இல்லாத நேரத்தில் இந்த ஜோடியை கட்டிப்பிடித்து காதல் செய்துள்ளனர். அந்த போட்டோ இப்போது வைரலாகி வருகிறது.

நேஷனல் டெலிவிஷன்ல இது என்னடா அசிங்கம். குழந்தைகள் கூட இந்த நிகழ்ச்சியை பார்க்கிறார்கள். அந்த அறிவு கூட இவங்களுக்கு இல்லையா.

இதை எப்படி பிக் பாஸ் டீம் அனுமதிக்கிறது என நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர். அதேபோல் இருவரையும் சேர்த்தே இந்த வாரம் துரத்தி விடுங்கள் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

கடந்த வாரம் கோவா அணியை வச்சு செய்த விஜய் சேதுபதி இந்த வாரம் இதை கவனிக்க வேண்டும். வாத்தியார் போல் பிரம்பை எடுத்து விளாசினால் தான் இவர்கள் மாறுவார்கள்.

Trending News