Rathnam Movie Review: ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ரத்னம் இன்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி உள்ளது. பிரியா பவானி சங்கர், யோகி பாபு, சமுத்திரகனி, கௌதம் மேனன் என ஒரு பட்டாளமே நடித்திருக்கின்றனர்.
கடந்த சில வாரங்களாகவே பயங்கர பிரமோஷன் நடந்த நிலையில் இன்று படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ரத்னம் வெற்றியா? தோல்வியா? என ஒரு விமர்சனத்தின் மூலம் இங்கு காண்போம்.
அரசியல்வாதியான சமுத்திரக்கனியிடம் அடியாளாக இருக்கிறார் விஷால். எங்கு தப்பு நடந்தாலும் தட்டிக் கேட்கும் ஹீரோ சண்டைக்கோழி போல் அடி வெளுத்து வாங்குகிறார்.
ரத்னம் விமர்சனம்
அவரிடம் ஹீரோயின் பிரியா பவானி சங்கரை காப்பாற்றும் பொறுப்பு வந்து சேர்கிறது. நீட் தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும் அவருக்கு என்ன பிரச்சனை? விஷாலுக்கும் ஹீரோயினுக்கும் என்ன சம்பந்தம்? முக்கிய வில்லன் யார்? போன்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ரத்னம்.
வழக்கம்போல ஹரி படத்தில் இருக்கும் வேகம் விறுவிறுப்பு அனைத்தும் இருக்கிறது. அதிலும் விஷால் வெறித்தனமாக ஆக்சன் விருந்து வைத்திருக்கிறார்.
சண்டைக்கோழி முதல் பாகத்தில் அவர் எந்த அளவுக்கு துடிப்புடன் இருந்தாரோ அதேபோல் இதில் வருகிறார். அடுத்ததாக பிரியா பவானி சங்கர் தனக்கான வேலையை சரியாக செய்திருக்கிறார்.
இவரைச் சுற்றி நகரும் கதை என்பதால் அதை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆனால் முதல் பாதியில் இருக்கும் வேகம் இரண்டாவது பாதியில் வேற ரூட்டுக்கு பயணிக்கிறது.
அதேபோல் பாடல்களும் சுமார் தான். அதிலும் யோகி பாபுவின் காமெடி சில இடங்களில் ரசிக்க வைத்தாலும் பல இடங்களில் மொக்கை தான். ஆக்ஷனில் கவனம் செலுத்திய இயக்குனர் இதில் கொஞ்சம் பார்த்து செய்திருக்கலாம்.
ஆக மொத்தம் ஆக்ஷன் விரும்பிகளுக்கு ஏற்ற படம் தான் ரத்னம். அந்த வகையில் விஷால், ஹரி கூட்டணிக்காக படத்தை ஒரு முறை பார்க்கலாம்.
சினிமா பேட்டை ரேட்டிங்: 2.75/5