விஷால், என்றைக்கு நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றில் பொறுப்பை எடுத்துக் கொண்டாரோ அன்றிலிருந்து அவரது பெயர் ஏகத்துக்கும் டேமேஜாகி வருவது மறுக்க முடியாத ஒன்று.
1008 கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபடுவதாகவும் அவர் மீது புகார்கள் எழுந்து வருகின்றன. இதனால் தற்சமயம் மற்ற பொறுப்புகளை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு தான் உண்டு தன் படம் உண்டு என வேலை செய்து வருகிறார்.
இருந்தாலும் முன்னர் போல் சினிமாவுக்கு விஷால் உண்மையாக இல்லை என்றே கூறுகின்றனர். தயாரிப்பாளர்களின் வலியைப் புரிந்து கொள்ளாமல் இஸ்டத்திற்கு படப்பிடிப்புக்கு வருவது, நினைத்தால் சொல்லாமல் கொள்ளாமல் விடுமுறை எடுத்துக் கொள்வது என படுத்தி எடுக்கிறாராம்.
அதேபோல் அவரை வைத்து படம் தயாரிக்க அட்வான்ஸ் கொடுத்த பலரும் அவர் பின்னால் கெஞ்சிக் கொண்டிருக்கும் நிலைமை. விஷால் தயாரிப்பாளராகவும் சில படங்களை எடுத்துள்ளார். அப்படித் தான் தயாரித்த மருது படத்திற்காக மதுரை அன்பு செழியனிடம் பைனான்ஸ் வாங்கியுள்ளார்.
ஆனால் குறித்த நேரத்தில் பணம் கட்ட முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த நேரத்தில் லைக்கா நிறுவனம் தானாக முன்வந்து விஷாலின் கால்ஷீட் வேண்டும் என்பதற்காக அந்த கடனை அடைத்து விஷாலிடம் கால்சீட் கேட்டு வந்துள்ளனர்.
விஷாலோ கடனை அடைத்த பிறகு லைகா நிறுவனத்தை கண்டுகொள்ளவே இல்லையாம். இதனால் கடுப்பான லைகா விஷால் மீது புகார் அளிக்க, நீதிமன்றமும் படத்தை வெளியிடும் சமயத்தில் இந்த வழக்கை தொடர்ந்ததால் உங்களுக்கு 5 லட்சம் அபராதம் என ஆப்பு வைத்துவிட்டதாம். சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்ற கதையாகி விட்டதாம் லைக்காவின் நிலைமை.