தமிழ் சினிமாவில் நடிகர்களுக்குள் எப்போதுமே ஒரு நட்பு வட்டாரம் இருக்கும். அந்த வvishal arya enemy movie update கையில் நெருங்கிய நண்பர்களான விஷால் மற்றும் ஆர்யா மீண்டும் இணைந்து எனிமி எனும் புதிய படத்தில் நடித்து வருகின்றனர். முன்னதாக அவன் இவன் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
சமீப காலமாக தொடர்ச்சியாக ஆக்சன் படங்களில் நடித்து வரும் விஷாலுக்கு, சமீபத்தில் வெளியான சக்ரா, ஆக்சன் ஆகிய படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை. எனிமி படத்தில் மீண்டும் ஆர்யா உடன் கூட்டணி வைத்திருப்பதால், இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
மேலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரிப்பதற்கு இப்படத்தின் இயக்குனரும் ஒரு முக்கிய காரணம். அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் தான் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் அதிரடியான ஆக்சன் படங்களை இயக்குவதில் வல்லவர்.

இப்படத்தில் ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டுவிட்டன. வரும் 9ஆம் தேதி இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. மொத்தம் 8 தினங்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். ஒரு பாடல் காட்சியும், பேட்ச் வொர்க்கும் எடுக்கப்பட உள்ளன. இறுதிக்கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்த உள்ளனர்.
படத்தில் விஷால், ஆர்யாவுடன் மிருணாளினி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மினி ஸ்டுடியோஸ் சார்பில் வினோத் குமார் தயாரிக்கிறார்.