வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

எல்லா பக்கமும் பகையை வளர்த்துக் கொள்ளும் விஷால்.. விக்ராந்த், விஷ்ணு விஷால் கூட இப்படி ஒரு மோதலா?

விஷால் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்து மிகவும் கொடி கட்டி பறந்தார் என்றே சொல்லலாம். ஆனால் அது குறுகிய காலத்திலேயே தலைகீழாக மாறிவிட்டது. அதனால் தொடர்ந்து படங்களில் வெற்றி பெற முடியாமல் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறார். இதனை அடுத்து பல சர்ச்சைகளிலும் இவர் பெயர் அடிபட்டது.

இவர் எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்தாலும் இவருக்கு பக்க துணையாக இருந்து இவர் கஷ்டங்களில் பங்கேற்றவர்தான் இவருடைய நண்பர்கள். அப்படிப்பட்ட நண்பர்கள் தான் விஷ்ணு விஷால், ஆர்யா மற்றும் விக்ராந்த். இவர்களுடைய நட்பு வட்டாரம் எப்படி என்றால் எப்பொழுதும் ஒன்றாக சேர்ந்து சுற்றுவது, பார்ட்டிகளில் ஒன்றாக ஆட்டம் போடுவது மற்றும் சந்தோஷங்களிலும், கஷ்டங்களிலும் துணையாக இருப்பது.

Also read: அடி மேல, அடி மேல அடி வாங்கும் விஷால்.. அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம்

நட்புக்கு உதாரணமாக இவர்களை சொல்லலாம். அந்த அளவிற்கு சினிமா வட்டாரமே பொறாமைப்படும் அளவிற்கு இவர்கள் ஒன்றாக தான் இணைந்திருப்பார்கள். அப்படிப்பட்ட இவர்களுக்குள் சில மனக்கசப்பு ஏற்பட்டதால் இப்பொழுது பிரிந்து விட்டனர். இதற்கெல்லாம் காரணமாக இருப்பது விஷால் மட்டுமே.

ஏற்கனவே இது சம்பந்தமாக விக்ராந்த்,விஷ்ணு விஷால் மரியாதை இல்லாத இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம் என்று ஒரு ட்வீட் போட்டு இருந்தார். இதற்கு காரணம் விஷால் தயாரிப்பாளரின் சங்கத் தலைவராக இருக்கும் பொழுது விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் படங்களுக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்பதுதான்.

Also read: கேரியரை காப்பாற்றிக்கொள்ள விஷால் போடும் திட்டம்.. விஜய்க்கு மறுப்பு தெரிவிக்க சொன்ன காரணம்

இதனைத் தொடர்ந்து சிசிஎல் எனப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் இப்பொழுது நடைபெற்று வருகிறது. இதில் எப்பொழுதுமே இவர்கள் மூவரும் நட்பு கூட்டணியாக பங்கேற்பார்கள். ஆனால் தற்போது நடைபெற்று வரும் கிரிக்கெட்டில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் மட்டுமே விளையாடி வருகின்றனர். விஷால் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை.

அதற்கு காரணம் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை தான். அப்படி இவர்களுக்குள் என்னதான் பிரச்சனை என்பது தெரியவில்லை. ஆனால் இந்த அளவுக்கு விஷால் அவர்களை விட்டு ஒதுங்குவது பெரிய மோதல் ஏற்பட்டுள்ளதாக கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபட்டு வருகிறது. விஷாலிடம் உருப்படியாக இருந்த ஒரு விஷயம் அவருடைய நண்பர்கள் தான். அதையும் தொலைத்து விட்டு அவதிப்பட்டு வருகிறார்.

Also read: ஆழம் தெரியாமல் காலை விட்ட தயாரிப்பாளர்.. நாமம் போட்டு கழட்டி விட்ட விஷால்

Trending News