வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஒட்டுமொத்த ஈகோவால் நாசமாய் போகும் நடிகர் சங்கம்.. விஷால் போட்ட தப்பு கணக்கு

நடிகர் சங்கத்துக்கு புது கட்டிடம் கட்ட வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசைப்பட்டு வந்தனர் சினிமா துறையினர். அப்படி விஷால் பொறுப்பேற்ற பிறகு எந்த ரூபத்திலையாவது அந்த கட்டிடத்தை முடித்து விட வேண்டும் என்று பல சபதம் போட்டார். முடித்த பிறகு தான் கல்யாணம் என்று கூட கூறி வந்தார்.

ஆரம்பத்தில் விஜயகாந்த் இருக்கும் போது அந்த கட்டிடம் நன்றாக தான் இருந்தது, அப்பவே அதை கட்ட ஆரம்பித்தால் இப்பொழுது முடித்து இருக்கலாம், இவ்வளவு செலவு கூட ஆகி இருக்காது. அதையும் அந்த நேரத்தில் கோட்டை விட்டுவிட்டனர்.

Also Read: நான் அவ்வளவு திறமையான ஆள் கிடையாது.. லியோ படத்தை மறுத்ததற்கு விஷால் கூறிய மொக்க காரணம்

அதன் பிறகு அந்த கட்டிடத்தை இடித்து கட்ட வேண்டும் என்று விஷால் தரப்பு முடிவு எடுத்தது. அப்போது கட்ட ஆரம்பித்து இருந்தால் கூட 20 கோடிக்குள் கட்டி முடித்து இருக்கலாம். ஆனால் இப்பொழுது 40 கோடிகள் செலவழித்தால் தான் அந்த கட்டிடத்தை முழுமையாக கட்ட முடியும் என்று மாறியது.

கலை நிகழ்ச்சிகள் நடத்தி பொதுமக்களிடம் வசூலிக்கலாம் என்று ஒரு கேவலமான யோசனையை முன்னிறுத்தினர். நடிகர்கள் வாங்கும் 100 கோடி சம்பளத்தில் யாராயினும் மூவர் சேர்ந்தால் கூட எளிதாக அந்த கட்டிடத்தை கட்டி முடித்து விடலாம். இதற்கு போய் பாமர மக்களிடம் நிதி வசூலிப்பது எண்ணம் அந்த நேரத்தில் பலரின் எதிர்ப்பை சம்பாதித்தது.

Also Read: மீண்டும் தயாரிப்பாளர் தலையில் சட்னி அரைக்கும் விஷால்.. யாருமே இல்லாத கடையில் டீ போட்டு என்ன பிரயோஜனம்

விஜய், அஜித், கமல், ரஜினி போன்றவர்கள் மனது வைத்தால் எளிதாக கட்டிடத்தை முடித்து விடலாம். ஆனால் விஷால் இதில் ஈகோ பார்ப்பதாக தெரிகிறது. அதாவது இப்பொழுது உதாரணமா அஜித், ஐந்து கோடிகள் கொடுத்தார் என்றால் நாமும் அதை செய்ய வேண்டும் என்று ஒரு ஈகோ பிரச்சனை உருவாகும்.

இதனாலையே நடிகர் சங்கம் கட்டிடம் இழுபறியில் இருக்கிறது. மொத்தத்திற்கும் ஒவ்வொருத்தரின் ஈகோ பிரச்சனை தான் இதற்கு காரணம். வரையறுக்கப்பட்டுள்ள உச்ச நட்சத்திரங்கள், அடுத்த கட்டத்தில் உள்ள நட்சத்திரங்கள் என ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரிவு டொனேஷனை வாங்கி கட்டினால் தான்இதற்கு ஒரு முடிவு கிடைக்கும்.

Also Read: நண்டு சிண்டெல்லாம் இயக்குனராகுது, நம்ம மட்டும் இப்படியே இருக்கோமே.. ஜேசன் சஞ்சய்யை பார்த்து ஆதங்கப்படும் விஷால்

Trending News