நடிகர், நடிகைகள் காதலிப்பதும் பின்னர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வதும் உலக சினிமாவுக்கு புதிது கிடையாது. ஆனால் விஷால் மற்றும் வரலட்சுமி அப்படியில்லை. இருவரும் ஒருவருக்கொருவர் அப்படியொரு அன்யோன்யமான காதலை வளர்த்து வந்தனர்.
இந்த செய்தி பல பத்திரிகைகளில் அதிகாரப்பூர்வமாக வெளியானது. ஆனால் திடீரென இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து அவரவர்கள் வழியில் செல்லத் தொடங்கி விட்டனர். அதன்பிறகு விஷாலுக்கு பிரபல தொழிலதிபர் மகளுடன் நிச்சயம் நடைபெற்று பின்னர் திருமணம் கை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால் வரலட்சுமி காதல் தோல்விக்குப் பிறகு சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். சமீபகாலமாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வரலட்சுமி நடிக்கும் படங்கள் தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து வருகின்றன.
இந்நிலையில் விரைவில் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு வரலட்சுமி மனைவியாக போவதாக பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் யூடியூப் தளத்தில் தெரிவித்துள்ளார். அந்த கிரிக்கெட் வீரர் கோலி மற்றும் தோனி ஆகிய இருவருக்கும் மிக நெருங்கிய நண்பராம்.
ஏற்கனவே சரத்குமார் மனைவி ராதிகாவின் மகள் பிரபல கிரிக்கெட் வீரர் அபினவ் மிதுன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது வரலட்சுமிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவருடன் காதல் ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் விரைவில் இரு வீட்டார் சம்மதத்துடன் வரலட்சுமிக்கு திருமணம் நடக்க உள்ளதாம். ஆனால் அந்த கிரிக்கெட் வீரர் யார் என்பதை நிச்சயமாகும் வரை வெளியில் சொல்ல வேண்டாம் என முடிவு செய்துள்ளார்களாம் வரலட்சுமி குடும்பத்தினர். வரலட்சுமி நடிப்பில் 2021 ஆம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 5 படங்களுக்கு மேல் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.