சமீப காலமாகவே விஷாலை கெட்ட நேரம் பிடித்து ஆட்டுகிறது. ஏனென்றால் இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் வரிசையாக படு தோல்வியை சந்தித்து கொண்டிருக்கிறது. அதிலும் நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான லத்தி திரைப்படம் பல போராட்டங்களுக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் ரிலீஸ் செய்தாலும் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
முக்கியமாக லத்தி போடும் தியேட்டர்களில் கூட்டமே இல்லாமல் காத்து வாங்கிய அவலமும் அரங்கேறியது. இதனால் 25 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் போட்டு காச கூட எடுக்க முடியாமல் திணறியது. மேலும் விஷாலின் லத்தி படத்தை அவரின் நண்பர்களாகிய நந்தா மற்றும் ரமணாவின், ராணா தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது.
Also Read: இஷ்டத்துக்கு உளறும் விஷால்.. பேராசையால் பெயரை கெடுத்துக்கொள்ளாமல் இருந்தால் சரி
வழக்கம் போல் இந்த படமும் விஷாலுக்கு ஊத்திக் கொண்டது. படம் நஷ்டம் அடையவே விஷாலின் நீண்ட கால நட்பில் சிக்கல் வந்தது. இதனால் நண்பர்களுக்குள் விரிசலும் ஏற்பட்டது. விஷாலுக்கு ஒரு கோடி வரை சம்பளம் பாக்கி வைத்து விட்டனர். விஷாலுக்கு சம்பளம் பாக்கி வைத்தால் பரவாயில்லை. அவுட்டோர் யூனிட் எனப்படும் வெளி ஆட்களுக்கும் சம்பளம் பாக்கி வைத்து விட்டார்கள்.
அது கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ரூபாயாம். அவர்கள் விஷாலிடம் இப்பொழுது நச்சரிச்சி வருகின்றனர். விஷால் தான் பினாமி என அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. அதனால் தான் படத்தின் தயாரிப்பாளர்களான நந்தா மற்றும் ரமணாவை விட்டுவிட்டு விஷாலின் கழுத்தை நெரிக்கின்றன.
Also Read: இறுதிகட்ட படப்பிடிப்பில் மார்க் ஆண்டனி.. வித்தியாசமான லுக்கில் விஷால், எஸ்ஜே சூர்யா
இது பற்றி ரமணா மற்றும் நந்தா இருவரும் வாய் திறக்காமல் அமைதியாக இருப்பது தான் விஷாலுக்கு சங்கடத்தை அளிக்கிறது. அதுமட்டுமின்றி தொடர் தோல்விகளால் இனி படம் நடிப்பதை விட்டுவிட்டு படத்தை இயக்குவதிலும் தயாரிப்பதிலும் கவனம் செலுத்தலாம் என்ற முடிவுக்கு விஷால் வந்துள்ளார்.
ஆனால் கடைசி கடைசியாக மார்க் ஆண்டனி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது விஷாலுக்கு 33-வது படம். இதில் எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற 5 மொழிகளில் பான் இந்தியா படமாகவும் ரிலீஸ் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read: புரட்சி செய்ய புறப்பட்ட புரட்சித் தளபதி.. எம்ஜிஆர் ரசிகர்களை பிடிக்க, விஷால் செய்யும் சேட்டை