புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தளபதியுடன் மோத போகும் சின்ன தளபதி.. சண்டைல கிழியாத சட்ட எங்க இருக்கு

விஷால் கோர்ட், கேஸ், பஞ்சாயத்து என கடும் பிஸியாக சுற்றிக் கொண்டிருக்கிறார். லைக்கா  மற்றும் விஷாலுக்கு இடையிலான பஞ்சாயத்து கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. பகலும் இரவுமாக இந்த பிரச்சனைக்காகத்தான் விஷால்   இப்பொழுது  கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்.

 மதுரை பைனான்சியர் அன்புச்செழியனிடம்  விஷால் 21 கோடி கடனாக வாங்கி உள்ளார். அது வட்டி மேல் வட்டி போட்டு மொத்தமா 23 கோடிகள் செலுத்தும் படி வந்துள்ளது. இந்த காசை லைக்கா நிறுவனம் அன்புச்செழியனிடம் கொடுத்துவிட்டது. மாறாக விஷால் லைக்காவிற்கு கால் சீட் கொடுக்கும்படி அக்ரிமெண்ட் .

 ஆனால் விஷால் இன்று வரை அந்த பணத்தையும் கொடுக்கவில்லை கால் சீட்டும் கொடுக்கவில்லை. அதுமட்டுமின்றி விஷால் பிலிம் புரொடக்ஷன்ஸ்  நிறுவனத்தில் வெளியிடும் படங்கள் அனைத்தும் லைக்கா அனுமதி பெற்ற பிறகு பண்ண வேண்டும் என்றும் அக்ரிமெண்டில் போடப்பட்டிருந்தது.

 விஷால் நடிப்பில் வெளியான “வீரமே வாகை சூட வா” படத்தை விஷால் முறைப்படி வைக்காவிடம் தெரிவிக்காமல் வெளியிட்டதால் இந்த பஞ்சாயத்து  கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கோர்ட்டிலும் ரொம்ப தெனாவட்டா பதில் அளித்துள்ளார் விஷால். நீதிபதி அவரை எச்சரித்து முறைப்படி பேச வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளார்

சண்டைல கிழியாத சட்ட எங்க இருக்கு

 இது ஒரு புறமும் இருக்க சுந்தர் சி இயக்கத்தில் விஷால் ஐந்து வருடங்களுக்கு முன்பு நடித்த படம் மதகதராஜா. இப்பொழுது இந்த படம் ரிலீசாக உள்ளது. பல போராட்டங்களுக்குப் பிறகு ஜெமினிஸ் டுடியோஸ் இந்த படத்தை ரிலீஸ் செய்கிறது.

 மதகஜராஜா படம் விஷால் நடிப்பில் உருவாகி  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோட் படம் ரிலீசாகும் தேதியில், அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசாக  இருக்கிறதாம். வியாபாரமே ஆகாமல் கிடப்பில் கிடந்த இந்த படம் இப்பொழுது விஜய்யின் கோட் படத்திற்கு போட்டியாக வெளிவருகிறது. 

Trending News